Turmeric Powder Benefits in Tamil
வணக்கம் நண்பர்களே..! தினமும் இந்த பதிவின் வாயிலாக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் பதிவு என்னவாக இருக்கும் என்று ஒரே யோசனையாக இருக்கிறதா..? அது என்ன தகவல் என்று தெரிந்து கொள்வதற்கு முன் உங்கள் வீட்டில் மஞ்சள் தூள் இருக்கிறதா..? இதென்ன கேள்வி எந்த வீட்டில் மஞ்சள் தூள் இல்லாமல் இருக்கும் சொல்லுங்கள் என்று கேட்பீர்கள். உண்மை தான் மஞ்சள் தூள் சேர்க்காத உணவுகளே கிடையாது. அந்தளவுக்கு மஞ்சள் தூள் சமையல் பொருட்களில் முக்கியமான பொருளாக இருக்கிறது. சரி மஞ்சள் தூளை பற்றி நமக்கு தெரியும். ஆனால் அதில் இருக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
சீரகத்தை சமையலுக்கு சேர்க்கும் முன் அதன் தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள் |
மஞ்சள் தூள் நன்மைகள்
நீரிழிவு நோய்: மஞ்சள் தூளில் இருக்கும் பண்புகள் வீக்கத்தை எதிர்த்துப் போராடவும் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும் இது நீரிழிவு நோயைத் தடுக்க அல்லது சிகிச்சையளிக்க ஒரு பயனுள்ள மருந்து பொருளாக இருக்கிறது.
வைரஸ் தொற்றுகள்: பொதுவாக மஞ்சள் தூளில் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் அதிகமாகவே இருக்கிறது. எனவே இது ஹெர்பெஸ் மற்றும் காய்ச்சல் போன்ற பல்வேறு வைரஸ் தொற்றுக்களை எதிர்த்துப் போராட மஞ்சள் நமக்கு உதவுகிறது.
இதய நோய்: பெரும்பாலும் மஞ்சளில் இருக்கும் பண்புகள் வீக்கம் மற்றும் ஆக்சிஜனேற்றத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் மஞ்சள் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. அதாவது மஞ்சள் இதய நோய் செயல்முறையை மாற்றியமைக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நீங்க வீட்டில் மஞ்சள் பயன்படுத்துவீங்களா.. அப்போ இது தெரியாம பயன்படுத்தாதீங்க |
புற்றுநோயைத் தடுக்க: மஞ்சள் தூள் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்க உதவும் என்று சொல்லப்படுகிறது. மேலும் மஞ்சள் தூளில் இருக்கும் பண்புகள் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் புண்களின் எண்ணிக்கையை 40% வரை குறைக்கும் என்று கூறப்படுகிறது.
மனச்சோர்வு: மஞ்சள் தூளில் இருக்கும் சத்துக்கள் மனச்சோர்வைக் குறைக்கும் ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன. மேலும் இது உடலில் ஆண்டிடிரஸன் மருந்துகள் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது.
கீல்வாதம்: நாம் அன்றாடம் மஞ்சள் தூளை உணவில் சேர்த்து கொள்வதால் கீல்வாதம் வராமல் தடுக்கிறது. மேலும் இது கீல்வாதத்தினால் ஏற்படும் வலியைக் குறைக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
கெட்ட கொழுப்பு: நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்க மஞ்சள் தூள் உதவுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? மஞ்சள் LDL கெட்ட கொழுப்பைக் குறைக்கும் என்று சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |