உளுந்து களி நன்மைகள் | Ulundhu Kali Benefits in Tamil
நம் முன்னோர்கள் உணவே மருந்தாக சாப்பிட்டு வந்தார்கள். அவர்கள் காலத்தில் சாப்பிட உணவுகள் அனைத்தும் சத்தானதாகவும், உடலுக்கு பல வகையான நன்மைகளை தரக்கூடியதாகவும் இருந்தது. அதனால் நம்முன்னோர்கள் 100 வயது வரையும் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் இந்த நவீன காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அனைவரும் உணவு சுவையாக இருந்தால் மட்டும் போதும் என்று நினைக்கின்றோம். இவ்வாறு நாம் நினைப்பது தான் மிகவும் தவறு.
அனைவருடைய வீட்டிலும் கோதுமை, உளுந்து, கம்பு என இதுபோன்ற தானிய வகைகளை கஞ்சியாகவோ அல்லது களியாகவோ சாப்பிட சொல்வார்கள். ஏனென்றால் அப்போது தான் உடல் வலி எதுவும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் நாம் சாப்பிட மறுக்கும் உளுந்து களியில் உள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க..!
உளுந்து களி நன்மைகள் | Karuppu Ulundhu Kali Benefits in Tamil:
வயிறு பிரச்சனை:
உளுந்து களி ஆனது நமது உடலுக்கு மிகவும் ஏற்றது. அதிலும் குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்சனையினை சரி செய்ய உதவுகிறது. உளுந்து களியில் நார்ச்சத்து இருப்பதனால் இது வயிற்று போக்கினை குணப்படுத்துகிறது.
மேலும் மலச்சிக்கல் பிரச்சனை வராமலும் இருக்க பெரும்பங்கு வகிக்கிறது.
சிறுநீரக கல் வராமல் தடுக்க:
அதேபோல் கருப்பு உளுந்தில் நாம் களி செய்து சாப்பிடுவதனால் இது சிறுநீரகத்தில் கல் வராமல் இருக்க செய்கிறது. மேலும் உளுந்து களியை வாரம் 1 முறை என சாப்பிட்டு வருவதன் மூலம் உடலின் ஆரோக்கியம் மேம்படும்.
உடல் ஊட்டச்சத்துக்கள்:
எப்பேர்ப்பட்ட உடல் ஊட்டச்சத்து குறைபாட்டினையும் உளுந்து களி நீக்கி ஊட்டச்சத்தினை அதிகரிகரிக்க செய்யும். இதில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நமது உடல் மற்றும் எலும்பினை பலம் பெற செய்ய உதவுகிறது.
பெண்களுக்கு:
பெண்கள் பருவம் அடைந்த நாட்களில் உளுந்து களி தான் கொடுப்பார்கள். ஏனென்றால் இதில் உள்ள இரும்புச்சத்து உடலை பலம்பெற செய்து மாதவிடாய் காலத்தில் வழிகள் எதுவும் வராமல் இருக்க செய்கிறது.
மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு இதை கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியினை தாய்க்கும், பிள்ளைக்கும் கொடுக்கிறது.
ஆண்மை குறைபாடு:
பொதுவாக ஒரு சில ஆண்களுக்கு ஆண்மை குறைவு என்ற பிரச்சனை ஏற்படும். ஆனால் இந்த பிரச்சனையினை உளுந்து களி குணப்படுகிறது. அதாவது ஆண்மை குறைவு உள்ளவர்கள் வாரம் 1 முறை இதை சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கான பிரச்சனை விரைவில் குணமாகிவிடும்.
ஆரோக்கிய இதயம்:
இன்றைய காலத்தில் நம்மில் பலருக்கு இதயத்தில் அடைப்பு அல்லது மாரடைப்பு ஆகிய பிரச்சனைகள் வருகிறது. ஆனால் இதுபோன்ற பிரச்சனைகள் எதுவும் வராமல் இதயம் ஆரோக்கியமாக இருக்க உளுந்து களி சிறந்த ஒன்று.
ஏனென்றால் வாரம் 1 முறை உளுந்து களியினை நாம் எடுத்துக்கொள்வதனால் இதில் உள்ள பொட்டாசியம் சத்து இரத்த நாளங்களில் இரத்த அழுத்தத்தைத் குறைக்க, நல்ல இரத்த ஓட்டம் ஆகியவற்றை அளிக்கிறது.
சர்க்கரை நோய் கட்டுப்பாடு:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் உளுந்து களி சாப்பிடுவதனால் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் காணப்படும் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க செய்யும்.
ஆகவே ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் வாரம் ஒரு முறை உளுந்து களி எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மிகவும் சிறப்பாக மாற்றிவிடும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |