யூரிக் ஆசிட் குறைப்பது எப்படி? யூரிக் அமிலம் குறைக்கும் உணவுகள்..!

Advertisement

யூரிக் ஆசிட் எதனால் வருகிறது – Uric Acid Meaning in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் ஆரோக்கிய பதிவில் யூரிக் அசிட் என்பது என்ன?, நம் உடலில் யூரிக் ஆசிட் அதிகமானால் என்னென்ன பிரச்சனைகள் வரும், அதை எப்படி குறைக்கலாம், யூரிக் அமிலம் குறைக்க என்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் போன்ற யூரிக் அமிலம் குறித்த பல்வேறு தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் சரி வாங்க பதிவுக்குள்ளே போவோம்.

யூரிக் ஆசிட் என்றால் என்ன?

நாம் இந்த உலகில் உயிர் வாழ வேண்டும் என்றால் நமக்கு ஆற்றல் வேண்டும். இந்த ஆற்றல் நமக்கு எங்கிருந்து கிடைக்கிறது என்றால் நாம் சாப்பிடும் உணவில் இருந்து தான் கிடைக்கிறது. நாம் என்ன உணவு சாப்பிட்டாலும் அது கடைசியாக ATB என்று சொல்ல கூடிய Energy Molecule என்பதிற்குள்ளே தான் செல்லும். அது தான் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது.

இவ்வாறு நாம் சாப்பிடும் உணவில் இருந்து ATP-ஐ உற்பத்தி செய்வதற்காக நம் உடம்பில் நடக்கக்கூடிய பிராசஸ் தான் மெட்டபாலிசம். இந்த மெட்டபாலிசம் சரியாக நடந்தால் தான் நாம் என்ன உணவு சாப்பிட்டாலும் அது ஆற்றலாக மாறும். இப்படி மெட்டபாலிசம் நடக்கும் போது நம் உடம்பில் பலவேறு வகையான Buy Products உற்பத்தி ஆகும். அவற்றில் சில வகைகள் நமது உடலுக்கு நல்லது செய்யக்கூடியதாக இருக்கும், சில வகைகள் நமது உடலுக்கு தேவையில்லாத நச்சு கழிவுகளாக இருக்கும். uric acid

அந்த நச்சு கழிவுகள் நமது சிறுநீர் வழியாகவும், மலம் வழியாகவும் வெளியே சென்றுவிடும். இது நமது உடலில் 24 மணி நாற்றம் நடக்கக்கூடிய ஒரு பிராசஸ்.

அதுபோன்று நமது உடலில் புயூரின் என்று சொல்லக்கூடிய ஒரு புரதத்தின்  மெட்டபாலிசம் நடக்கும் போது உற்பத்தியாக கூடிய ஒரு Buy Products தான் இந்த யூரிக் ஆசிட். புயூரின்என்பது நமது உடலுக்கு மிகவும் தேவையான ஒரு புரதம். இது தான் மனது உடலில் செல்களில் உள்ள DNA, RNA இது போன்ற நியூக்ளிக் ஆசிட்டை உற்பத்தி செய்ய ரொம்ப அவசியமான ஒன்றாகும்.

இந்த புயூரினுடைய மெட்டபாலிசம் நடக்கும் போது நமது உடலில் யூரிக் அமிலம் உற்பத்தி ஆகும். அப்படி உற்பத்தியாகும் யூரிக் அசிட்டில் 75% சிறுநீர் வழியாகவும், 25% மலம் வழியாகவும் வெளியே சென்று விடும். இவற்றை ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், நமது உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகும்.

யூரிக் ஆசிர பொதுவான அளவு – Uric acid normal value:

பொதுவாக இந்த யூரிக் அமிலம் ஆண்களுக்கு 3.5 முதல் 7 mg/dl, பெண்களுக்கு 2.5 முதல் 6 mg/dl இருக்கும். அதைவிட அதிகமாக இருந்தால் அதனை Hyperuricemia என்று அழைக்கப்படுகிறது. Hyperuricemia என்பது நமது உடலில் யூரிக் ஆசிட் அதிகமாக உள்ளது என்று அர்த்தமாகும்.

யூரிக் ஆசிட் அதிகரிக்க காரணம்:

  • ஒன்று அதிகப்படியாக யூரிக் ஆசிட் அதிகரிப்பது.
  • இரண்டு யூரிக் ஆசிட் நமது உடலில் இருந்து வெளியேறாமல் இருப்பது.

இந்த இரண்டு காரணங்களை தான் மேஜராக சொல்லப்படுகிறது.

ஏன் அதிகமாக யூரிக் அமிலம் உற்பத்தி ஆகிறது?

புயூரிக் மெட்டபாலிசம் அதிகமாகும் போது தான் யூரிக் அமிலம் உற்பத்தி ஆகும். ஆகி புயூரின் என்று சொல்லப்படும் புரதம் அதிகமாக இருக்கக்கூடிய உணவுகளை நாம் சாப்பிட்டோம் என்றால் அது மெட்டபாலிசம் ஆகும் போது நமது உடலில் யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தி ஆகும்.

யூரிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் யூரிக் ஆசிட் தவிர்க்க வேண்டிய உணவுகள் – Uric acid food to avoid in tamil

மட்டன், பன்றி இறைச்சி, மாட்டு இறைச்சி போன்றவற்றை அதிகமாக சாப்பிட்டால் யூரிக் ஆசிட் அதிகமாக உற்பத்தி ஆகும்.

அதேபோல் ஈரல் அதிகமாக சாப்பிட்டாலும் யூரிக் ஆசிட் அதிகமாக சுரக்கும்.

அதேபோல் மத்தி மாதிரியான மீன்களை உண்டாலும் யூரிக் ஆசிட் அதிகமாக உற்பத்தி ஆகும்.

மது அருந்தினாலும் யூரிக் ஆசிட் அதிகமாக உற்பத்தி ஆகும்.

காய்கறிகளில் காலிபிளவர், பச்சை பட்டாணி, காளான், கீரை வகைகள் போன்றவரை அதிகமாக உண்டாலும் யூரிக் அமிலம் உற்பத்தி ஆகும்.

இனிப்பு, பேக்கரி தின்பண்டங்கள், சோடியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் யூரிக் ஆசிட் அதிகமாகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் பொழுது என்ன நடக்கும் தெரியுமா.?

மற்ற காரணங்கள்:

இது தவிர எடை அதிகமாக உள்ளவர்களுக்கும் யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தி ஆகும். உடல் எடை அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் உடல் எடையை மிகவும் வேகமாக குறைத்தாலும் உடலில் யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தி ஆகும். உடல் எடை மிகவும் வேகமாக குறையும் போது நமது உடலில் உள்ள செல்கள் எல்லாம் டேமேஜ் ஆகும். அப்போது செல்களில் உள்ள நியூக்ளிக் ஆசிட் மெட்டபாலிசம் ஆகும் போது நிறைய யூரிக் அமிலம் உற்பத்தி ஆகும்.

இந்த உணவுகளை நீங்கள் சரியான அளவில் எடுத்துக்கொண்டாலும் கூட சில சமயங்களில் மரபணுக்கள் காரணமாகவும் யூரிக் அமிலம் உற்பத்தி ஆகும்.

மேலும் சில மருந்து வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலமாகவும் உடலில் யூரிக் அமிலம் அதிகம் ஆகும். அவை ஸ்டீராய்டு, ஆஸ்பிரின், டையூரிட்டிக் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதினாலும் யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தி ஆகும்.

உங்களுக்கு சிறுநீரகத்தில் ஏதாவது பிரச்சனை இருந்து அந்த யூரிக் அமிலம் வெளியேற முடியமால் இருந்தாலும் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும்.

தைராயிடு அளவு கம்மியாக இருப்பது, சொராயாசி, சர்க்கரை நோய் இவையெல்லாம் இருந்தாலும் உங்களுக்கு யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தி ஆகும்.

யூரிக் ஆசிட் அதிகமாக இருந்தால் என்ன ஆகும்? – Uric Acid Symptoms in Tamil

பொதுவாக நமது உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் நமக்கு எந்த பிரச்சனைகளையும் உண்டாக்காது. ஆனால் சிலருக்கு இந்த யூரிக் ஆடிட் அதிகமானால் உன்னோடு ஒன்று சேர்த்து ஒரு ஊசி போல் கிரிஸ்டல் உருவாகும். அது நமது உடலில் பல்வேறு இடங்களில் டெபாசிட் ஆகும். அதனால் சில பிரச்சனைகள் வரலாம்.

இந்த யூரிக் அமிலத்தின் கிரிஸ்டல் கல் மூட்டுகளில் உள்ள ஜெயிண்டில் இருந்தால், அதன் இடத்தில் கீல்வாதம் பிரச்சனையை ஏற்படுத்தும்.

கிட்னியில் டெபாசிட் ஆகும் போது யூரிக் ஆசிட் ஸ்டோன் உருவாகும். சிலருக்கு இந்த கிட்னி ஸ்டோன் என்பது நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். அதனால் கிட்னி பெயிலியர் ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

சிலருக்கு இந்த யூரிக் அமிலம் அதிகமாகும் போது பிளட் பிரஷர் அதிகமாகும்.

பெரும்பாலானவர்களுக்கு மேல் கூறப்பட்டுள்ள எந்த ஒரு அறிகுறிகளும் தெரியாது, அவர்கள் ஏதாவது வேறொரு பிரச்சனைக்காக இரத்த பரிசோதனை செய்திருப்பார்கள் அப்படி இரத்த பரிசோதனை போது யூரிக் அசிட் அதிகமாக இருப்பதாய் அறிவார்கள்.

அவ்வாறு அறிந்த பிறகு உங்களுக்கு ஏதாவது மேல் கூறப்பட்டுள்ள அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் சென்று அதற்கான சிகிச்சையை மேற்கொள்வது சிறந்தது. ஒரு வேளை உங்களுக்கு எந்த ஒரு அறிகுறிகளும் இல்லை என்றால் உணவு முறைகளையும், வாழ்வியல் முறை மாற்றங்களை சரியாக பின்பற்றினாலே போதும் யூரிக் ஆசிட்டின் அளவு குறைந்துவிடும்.

யூரிக் ஆசிட் குறைப்பது எப்படி?

புயூரின் அதிகம் உள்ள உணவுகளை குறைக்க வேண்டும். எந்தெந்த உணவுகளில் புயூரின் அதிகமாக இருக்கிறது என்று இந்த பதிவின் ஆரம்பத்திலேயே சொல்லிருப்போம். அந்த உணவுகளை மற்றும் குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது மிகவும் சிறந்தது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement