சிறுநீர் நிறத்தில் உங்கள் ஆரோக்கியத்தை அறியலாம்..!

Advertisement

Urine Color Meaning in Tamil

நமது உடலில் இருக்கும் கழிவுகள் அனைத்தும் நிறுநீர் மற்றும் மலத்தின் மூலமாக தான் வெளியேறும். சிறுநீர் என்பது கிட்னியில் உருவாகிறது, நமது ரத்தத்தில் இருக்கும் கழிவு பொருட்கள் எல்லாம் சிறுநீரக சேரும். சில நேரங்களில் புரதம், சிவப்பு ரத்த அணுக்கள் கூட சிறுநீரகம் வழியாகத்தான் வெளியேறுகிறது.

இவையெல்லாம் இயல்பான விஷயம் தான், ஆனால் உங்கள் சிறுநீரில் இருக்கும் நிறம் இருக்கிறது அல்லவா அந்த நிறம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மிக தெளிவாக சொல்லிவிடும். அதனை வைத்து உங்களுக்கு கிட்னி நோய் இருக்கா? இல்லை வேறு என்ன பிரச்சனை உடலில் இருக்கிறது என்பதை நீங்களி மிக எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.

சரி வாங்க இந்த பதிவின் மூலமாக அதனை பற்றி தெரிந்துகொவோம்..

வெள்ளை நிற யூரின்:

Urine Color Meaning

உங்கள் யூரின் நல்ல வெள்ளை நிறத்தில் வருகிறது என்றால் நீங்கள் நல்ல நீர் சத்துடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இருந்தாலும் சில நேரங்களில் நீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தும் போது யூரின் நல்ல கிளியராகவே வரும்.

ஆக அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தும் போது உங்கள் உடலில் உள்ள உப்புக்களை நீர்த்துப்போக வைத்து உங்கள் உடலுக்கு தீங்கையே விளைவிக்கும். இது உங்களுக்கு எந்த ஒரு ஆபத்தான பிரச்சனைகளை உண்டுபண்ணாது.

இருந்தாலும் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும் என்று உங்கள் உடலை நீங்களே கஷ்டப்படுத்த வேண்டாம்.

உங்கள் யூரினில் நிறமே இல்லை என்றால் அது சர்க்கரை நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். அது போன்று தொடர்ச்சியான தாக்கம், தொடர்ச்சியாக சிறுநீர் கழித்தால் மற்றொரு அறிகுறி என்று சொல்ராங்க, அது மட்டும் இல்லாமல் நீங்கள் அதிகமாக தண்ணீர் பருக வேண்டிய சோதனை ஏற்பட்டாலே நீங்கள் சர்க்கரை நோய்க்கான சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அடிக்கடி தசைகள் இழுக்கிறதா? அப்படின்னா உங்களுக்கு இந்த குறைபாடு இருக்கலாம்..!

லேசான மஞ்சள் நிற சிறுநீர்:

லைட் எல்லோவில் உங்கள் சிறுநீர் இருக்கிறது என்றால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

கொஞ்சம் அடர் மஞ்சள் நிற சிறுநீர் – Urine Yellow Colour Reason in Tamil:

அதுவே உங்கள் நிறுநீர் கொஞ்சம் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைந்துகொண்டே வருகிறது என்று அர்த்தம் ஆக நீங்கள் தண்ணீர் அதிகமாகவே அருந்த வேண்டும்.

சில உணவுகள் கூட உங்கள் நிறுநீரின் நிறத்தை மாற்றும் உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் பீட்ரூட் சாப்பிட்டால் உங்கள் யூரின் நிறம் கொஞ்சம் அடர்த்தியாக மாறும்.

பழுப்பு நிறம் சிறுநீர்:

நுரையீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறுநீர் பழுப்பு நிறத்தில் வெளியேறலாம். உங்கள் நுரையீரல் சரியாக செயல்படவில்லை என்றால் மலம் மூலமாக வெளியேற வேண்டிய பித்த உப்புகள் எல்லாம் சிறுநீர் மூலமாக தான் வெளியேறும். அதற்கான காரணம் இரத்தத்தில் இவை எல்லாம் அடர்த்தியாக இருப்பது தான்.

Hepatitis எனப்படும் ஒரு நுரையீரல் அலர்ஜி இதற்கான ஒரு உதாரணம் என்று சொல்றாங்க. இதற்கான தீர்வு என்னவென்றால் நீங்கள் ஒரு முறை மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது தான் இதற்கான தீர்வாகும்.

சிவப்பு நிற யூரின்:

பொதுவாக சிவப்பு நிறம் என்பது எச்சரிக்கைக்கான நிறம் என்று தான் சொல்ல வேண்டும். ஆக சிறுநீர் உங்களுக்கு சிவப்பு நிறத்தில் வந்தால் சிறுநீரக பாதையில் தொற்றுகள், சிறுநீரக பையில் கற்கள், புரோஸ்டேட் அல்லது சிறுநீர் பையில் புற்றுநோய் இது போன்ற காரணங்களினால் கூட ஒருவருக்கு சிறுநீர் சிவப்பு நிறத்தில் வரும்.

இந்த நிலை ஏற்ப்படும் போது அதாவது சிறுநீர் போகும் போது வலி ஏற்படும். அந்தமாதிரியான நேரத்தில் சிறுநீர் கழிக்கவே மிகவும் கஷ்டமாக இருக்கும். இது முன்பு கூறியது போல் சில உணவுகளினாலும் ஏற்படலாம், இருப்பினும் உணவுகளினால் இந்த நிறம் மாற்றம் ஏற்படாமல் பல முறை இந்த பிரச்சனை நடந்தாலே அது ஆபத்தான உடல் நிலை பிரச்சனையில் கொண்டுபோய் விட்டுவிடும்.

பச்சை நிற சிறுநீர்:

சிறுநீரகத்தில் சீல் இருந்தாலே யூரின் பச்சை நிறத்தில் வெளியேறுமாம் இதற்கு முக்கியமான காரணம் சிறுநீர் பாதை தொற்றுகள் தான், இதுமட்டும் இல்லாமல் கருப்பு நிறங்களில் இருக்கும் உணவுகள் கூட காரணமாக இருக்கலாம். முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் சில வகையான ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்வதினாலும் சிறுநீர் பச்சையாக வெளியேறும் என்று சொல்ராங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..?

நுரை கலந்துள்ள சிறுநீர்:

பொதுவாக சிறுநீரில் புரதம் வெளியேறினால் நுரை கலந்த சிறுநீர் வெளிவரும் என்று சொல்ராங்க. இல்லை என்றால் கிட்னி அல்லது பித்தப்பை பிரச்சனையாக கூட இருக்கலாம். ஆக இந்த நிலை தொடர்ச்சியாக ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் அணுகுவது தான் மிகவும் சிறந்தது.

கருப்பு நிற சிறுநீர்:

உங்கள் உடலில் அதிகப்படியான கெமிக்கல்ஸ் இருந்தாலே உங்கள் யூரின் கருப்பு நிறத்தில் தான் வெளியேறும் ஆக உங்களுக்கு இது போன்ற பிரச்சனை ஏற்படுகிறது என்றால் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement