கருப்பை அகற்றுதல் பக்க விளைவுகள்
பொதுவாக மனிதர்களுக்கு உடல் உறுப்புகள் ரொம்ப முக்கியமானது. இருக்கும் உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் நீண்ட நாள் உயிர் வாழ முடியும். அது போல பெண்களுக்கு கருப்பை என்பது ரொம்ப முக்கியமானது. கருப்பை ஆரோக்கியமாக இருந்தாலே அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம். இப்படிப்பட்ட கருப்பையில் சில பிரச்சனை ஏற்படும் போது கருப்பையை அகற்ற வேண்டும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பலரும் கருப்பையை எடுத்து விட்டால் அவ்வளவு தான் என்று பயமுறுத்துவார்கள். அதை பற்றி நாம் சிந்திக்க தேவையில்லை. ஏனென்றால் இந்த பதிவில் கருப்பையை அகற்றுவதால் ஏற்படும் தீமைகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
கருப்பையை அகற்றுவதால் ஏற்படும் தீமைகள்:
ஃபைப்ராய்டு கருப்பை கட்டி அறிகுறிகள் என்ன தெரியுமா..?
காயம் ஏற்படும்:
கருப்பை நீங்கம் அறுவை சிகிச்சை என்பது பெரிய அறிவை சிகிச்சையாக இருக்கிறது. இந்த அறுவை சிகிச்சையானது வயிற்றின் அடிப்பகுதியில் கிழித்து கருப்பையை எடுக்கப்டுகிறது. இதனால் உருவாகும் காயம் பெரிதாக இருக்கும். இவை ஆறுவதற்கு நேரமெடுக்கும்.
இரத்த சோகை:
அறிவை சிகிச்சையின் போது அதிகப்படியான இரத்தத்தை இழப்பீர்கள். இதனால் இரத்த சோகை பிரச்சனை ஏற்படும். அதனால் இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கு சத்துள்ள உணவை சாப்பிடுவது அவசியமானது.
புற்றுநோய் பிரச்சனை:
உங்களுக்கு புற்றுநோய் பிரச்சனை இருந்து அதனால் கருப்பையை அகற்றினால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுவே வேறு ஏதும் கட்டியாக இருந்து கருப்பை நீக்கம் செய்திருந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
எந்த வயது பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்:
45 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் கருப்பையை எடுத்த பிறகு உடலில் பிரச்சனைகளை சந்திப்பதில்லை. ஆனால் 45 வயதுக்குள் இருக்கும் பெண்கள் கருப்பையைஎடுத்து பிறகு பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
அதவாது உடல் சோர்வு, தலைவலி, அதிகமாக வியர்த்தல், படபடப்பு, உடல் சோர்வு, வேலையில் விருப்பம் இல்லாமல் இருப்பது, எரிச்சல் உணர்வு, உடல் சூடு, தேவையில்லாமல் கோபம் போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது கருப்பை இருந்தால் உடலிற்கு தேவையான ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ராஜன் என்ற ஹொர்மோன்கள் கிடைக்கும், இவை கருப்பை எடுத்த பிறகு கிடைக்காமல் போவதால் உடலில் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
கருப்பையில் இருக்கும் ஹார்மோன்கள் தான் நம் உடலிற்கு தேவையான சத்துக்களை சேகரித்து வைக்கும். இந்த சத்துக்கள் திடீரென கிடைக்காமல் போவதால் எலும்பு பலவீனமாகி கைவலி, கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
கருப்பையில் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |