Varattu Irumal Home Remedies in Tamil
மழைக்காலம் வந்தாலே சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதற்காக நாம் மருத்துவரிடம் காண்பித்து மருந்து மற்றும் ஊசிகள் போட்டு கொண்டாலும் சரி ஆகும். ஆனால் இந்த சளி, இருமல் மட்டும் போகவே போகாது. இதற்கு நிரந்தர தீர்வு என்றால் இயற்கை வைத்தியம் தான். அதனால் நம் பதிவில் இயற்கை முறையில் சளி இருமல் பிரச்சனையை சரி செய்வதற்கான குறிப்புகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வறட்டு இருமலை சரி செய்வதற்கு வீட்டு வைத்தியத்தை பற்றி அறிந்து கொள்வோம்.
வறட்டு இருமல் வீட்டு வைத்தியம்:
தேன்:
வறட்டு இருமலுக்கு டதேன் சிறந்த தேர்வாக இருக்கிறது. வறட்டு இருமல் ஏற்படும் பொழுது 1/2 தேக்கரண்டி தேனை கையில் வைத்து நக்க வேண்டும். நீங்கள் தேனை சாப்பிட்ட சில நிமிடங்களிலே வறட்டு இருமல் சரியாகும்.
இஞ்சி சிறிதளவு எடுத்து கொண்டு இதனை சிறியதாக நறுக்கி கொள்ள வேண்டும். இதனை ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு இதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனை ஒரு நாளைக்கு மூன்று வேலை குடித்து வந்தால் வறட்டு இருமல் சரியாகும்.
நிலவேம்பு கஷாயம் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
மஞ்சள்:
மஞ்சள் அலர்ஜி எதிர்ப்பு பண்பு மற்றும் ஆக்ஜினேற்ற பண்புகளை கொண்டுள்ளது. அதனால் இவை வறட்டு இருமலுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை எடுத்து கொள்ளவும். அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை கலந்து கொள்ளவும். இதனை பயன்படுத்தி வாய் கொப்பளிக்க வேண்டும். வாய் கொப்பளிக்கும் போது தண்ணீரானது தொண்டை குழி வரைக்கும் விட்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.
அடுத்து நீங்கள் பால் குடிப்பவராக இருந்தால் அதில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து பாலை குடிக்க வேண்டும்.
இது போல குடிப்பதால் வறட்டு இருமலை சரியாக்கும்.
உப்பு நீர்:
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கரிக்கின்ற அளவிற்கு உப்பை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை பயன்படுத்தி வாய் கொப்பளிக்க வேண்டும். வாய் கொப்பளிக்கும் போது தண்ணீரானது தொன்டை குழி வரைக்கும் விட்டு வாய் கொப்பளிக்க வேண்டும். இது போல ஒரு 5 அல்லது 6 முறை செய்ய வேண்டும்.
ஆவி பிடிக்க வேண்டும்:
ஒரு அகலமான பாத்திரத்தில் 5 டம்ளர் தண்ணீரை ஊற்றி மூடி போட்டு கொதிக்க விட வேண்டும். பிறகு இதனை இறக்கி விட்டு அதில் விக்ஸ் சிறிதளவு சேர்த்து கொள்ளவும். இதனை வைத்து 5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும்.
ஆவி பிடிப்பதால் சளி மற்றும் இருமல், வறட்டு இருமல் போன்றவற்றை சரி செய்வதற்கு உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை ஆவி பிடிக்க வேண்டும்.
5 நாட்களுக்கு மட்டும் உப்பினை சாப்பிடாமல் இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |