புரோட்டீன் சைவ உணவுகள் பட்டியல்
ப்ரோட்டீன் என்பது நம் உடலிற்கு தேவைப்படும் மிக முக்கிய ஊட்டச்சத்து ஆகும். ப்ரோட்டீன் சத்து இருந்தால் தான் உடல் ஆரோக்யமாக இருக்கும். இதனால் தான் அனைவரும் ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளை தேடு தேடி அதிகம் சாப்பிட விரும்புகிறோம். ப்ரோட்டீன் சத்து பெரும்பாலும், அசைவ உணவுகளில் தான் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால், சைவ உணவுளிலும் ப்ரோட்டீன் சத்து அதிகம் உள்ளது. ஆகையால், அசைவ உணவுகளுக்கு எதிராக சைவ உணவுகளிலும் அதிக ப்ரோட்டீன் உள்ளது என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
சைவ பிரியர்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் புரதம் நிறைந்த சைவ உணவுகளை தொகுத்து பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம். ஓகே வாருங்கள் புரோட்டீன் சைவ உணவுகள் பட்டியல் பற்றி படித்து தெரிந்து கொள்ளலாம்.
List of Protein Vegetarian Foods in Tamil:
பருப்பு வகைகள்:
பருப்பு வகைகளில் அனைத்து வகையான பருப்பிலும் ப்ரோட்டீன் அதிக அளவு புரத சத்து நிறைந்துள்ளது. புரத சத்தை தவிர்த்து நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான இரும்பு சத்து, மாங்கனீஸ் மற்றும் ஃபோலேட் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் சத்துக்களும் அடங்கியுள்ளது. ஆகையால், உணவுகளில் அதிக பருப்பு வகைகளை சேர்த்து கொள்வது மூலம், உடலிற்கு அதிக ப்ரோட்டீன் சத்து கிடைக்கிறது. முக்கியமாக கொண்டைக்கடலை அதிக புரதச்சத்து நிறைந்த பருப்புகளில் ஒன்றாகும்.
பீன்ஸ்:
புரதச்சத்தை கொண்டுள்ள பீன்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கக்கூடியது. இது உடலிற்கு ப்ரோட்டீன் சத்தை அளித்து கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. மேலும், ஒரு நாளைக்கு 1 கப் பீன்ஸ் சாப்பிடுவதன் மூலம் 6-8 கிராம் நார்ச்சத்தும் கிடைக்கிறது. இதனால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கிறது.
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள்
சோயா பீன்ஸ்:
சைவ உணவர்களுக்கு சோயா பீன்ஸ் அதிக ப்ரோட்டீன் தரும் உணவு பொருளாகும். தினமும் சோயா பீன்ஸை உணவில் சேர்த்து வருவதன் மூலம் நம் உடலிற்கு தேவையான அளவிற்க்கு புரதச்சத்து கிடைக்கும்.
நட்ஸ் வகைகள்:
நட்ஸ் வகைகளில் அதிக புரதச்சத்து நிறைந்துள்ளது. ஆகையால், நட்ஸ் வகைகளை நாம் அன்றாடம் சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் புரதச்சத்து அதிகரிக்கும். குறிப்பாக பச்சையாக அல்லது ஓட்ஸ் வகைகளுடன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் அதிக புரதச்சத்து கிடைக்கும்.
பச்சை பட்டாணி:
பச்சை பட்டாணியில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. 1 கப் வேகவைத்த பச்சை பட்டாணியில் 9 கிராம் அளவிற்கு புரதம் நிறைந்துள்ளது. பாலிற்கு இணையான புரதச்சத்து பச்சை பட்டாணியில் நிறைந்துள்ளது. புரதச்சத்தை தவிர, இதில் வைட்டமின்கள், தாதுக்கள், இரும்பு சத்து, ஜிங்க், செம்பு, வைட்டமின் C போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளது.
எள்:
எள்ளில் அதிக புரதச்சத்து நிறைந்துள்ளது. அதாவது, 1 ஸ்பூன் எள்ளில் 2 கிராம் புரதம் நிறைந்துள்ளது. ஆகையால், எள் அல்லது எள் அடங்கிய உணவு பொருட்களை அதிக அளவில் உணவில் சேர்த்து வருவதன் மூலம் உடலில் புரதச்சத்து அதிகரிக்கும்.
குயினோவா:
குயினோவாவில் குறைந்த அளவு கொழுப்பும் அதிக அளவில் புரதச்சத்தும் நிறைந்துள்ளது. ஆகையால், சைவ உணவர்களுக்கு குயினோவா ஒரு சிறந்த புரதம் நிறைந்த உணவாகும். 1 கப் அளவிற்கு குயினோவா எடுத்துக்கொள்வதன் மூலம் 9 கிராம் ப்ரோட்டீன் கிடைக்கிறது.
பயறு வகைகள்:
பயறு வகைகளில் அதிக புரதச்சத்து நிறைந்துள்ளது. அதிலும், குறிப்பாக முளைகட்டிய உணவு பொருட்களை எடுத்துக்கொள்ளும்போது அதில் இருமடங்கு புரதச்சத்து கிடைக்கிறது. ஆகையால், முடிந்த அளவிற்கு முளைகட்டிய பயறு வகைகளை எடுத்து கொள்வது நல்லது.
கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகள்
கீரை வகைகள்:
கீரை வகைகளில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக மற்ற கீரைகளை விட பொன்னாங்கண்ணி கீரையில் அதிக அளவு புரதம் நிறைந்துள்ளது. இது தவிர, இரும்பு, கால்சியம், மெக்னீசியம், செலினியம்,வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும், பசலை கீரையிலும் புரதசத்து மற்றும் இரும்புசத்தும் அடங்கியுள்ளது.
வெண்ணெய்:
பால் பொருட்களில் அதிக அளவில் புரதம் உள்ளது. ஆகையால், பால், தயிர், வெண்ணெய் போன்ற பால் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலில் புரதசத்து அதிகரிக்கும். இதுதவிர ஓட்ஸ், அவகோடா சியா விதை இனிப்பு சோளம் மற்றும் சோயா பால் போன்ற உணவு பொருள்களில் அதிக அளவு புரதம் நிறைந்துள்ளது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |