விளக்கெண்ணெயில் இவ்வளவு விஷயம் இருக்கா.! இது தெரியாம இதை பயன்படுத்துகிறோமே..

velakennai oil benefits in tamil

விளக்கெண்ணெய் நன்மைகள்

நவீன தொழில்நுட்ப காலத்தில் பல வகையான எண்ணெய் வகைகள் வந்திருந்தாலும் பாரம்பரிய எண்ணெய்களுக்கு இன்றளவும் அதன் தேவைகள் அதிகமாகவே இருக்கின்றன. அதில் இருக்கும் நன்மைகள் வேறெந்த கெமிக்கல் கிரீம்களுக்கும் ஈடுகொடுக்க முடியாது. அந்த வகையில் விளக்கெண்ணெய்யும் முக்கிய இடம் பெறுகிறது. அதை சாதாரண உடல் உபாதைகளுக்கு வீட்டு வைத்தியங்களுக்காக பயன்படுத்துவது மட்டுமன்றி சருமம் மற்றும் தோல் பராமரிப்பிற்கும் பயன்படுத்துவார்கள். அதனால் சருமம் சுருக்கங்களின்றி வயதானாலும் ஆரோக்கியமான சருமத்தை தக்க வைக்க உதவுகிறது. அந்த வகையில் விளக்கெண்ணெயில் உள்ள நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

விளக்கெண்ணெய் நன்மைகள்:

மாய்சரைசர்:

விளக்கெண்ணெய் நன்மைகள்

விளக்கெண்ணெயில் ரிசினோலிக் அமிலம், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இந்த அமிலமானது முகத்தை ஈரப்பதமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. நீங்கள் தினமும் விளக்கெண்ணெயை 2 சொட்டு எடுத்து முகம் மற்றும் கழுத்து பகுதி வரைக்கும் பயன்படுத்தலாம். இல்லையென்றால் மாய்சரைசருடன் கலந்து பயன்படுத்தலாம்.

காயத்தை குணப்படுத்த:

விளக்கெண்ணெய் நன்மைகள்

விளக்கெண்ணெயானது தோலை ஈரப்பதமாக வைத்து கொள்வதால் தோல் அலர்ஜி மற்றும் வறட்சியை நீக்குகிறது. விளக்கெண்ணெய் ஒரு ட்ரைகிளிசரைடு ஆகும், இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது. தோலில் பயன்படுத்தப்படும் போது, ​​​​அது தொற்றுநோயைத் தடுக்கலாம், வீக்கத்தைக் குறைக்கலாம். மேலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

நாம் பயன்படுத்தும் நலங்கு மாவில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா..?

முடி வளர்ச்சி:

விளக்கெண்ணெய் நன்மைகள்

விளக்கெண்ணெயை சிறிதளவு சூடாக்கி தலை முடி முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். இது போல் வாரத்தில் இரண்டு நாட்கள் என்று தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்வை தடுத்து வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

உச்சந்தலையில் உள்ள ph அளவை சமமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. மேலும் தலையில் ஏற்படும் எரிச்சலை குறைக்கவும் உதவுகிறது.

வயதான சருமம் வராமல் தடுக்க:

வயதான சருமம் வராமல் தடுக்க

விளக்கெண்ணெயை தோலில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமத்தை ஈரப்பதமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. இதனால் தோல் சுருக்கங்கள் வராமலும் என்றும் இளமையாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.

கீல்வாத நோயை தடுக்க:

இதில் ரிசினோலிக் அமிலம் உள்ளது. இவை வீக்கத்தால் ஏற்படும் வலியை குறைக்கிறது. மேலும் கீல்வாத பிரச்சனையை சரி செய்யவும் உதவுகிறது.

வெண்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்