வில்வ இலையில் உள்ள நன்மைகள்

Advertisement

Vilvam Leaf Benefits in Tamil

பொதுவாக நாம் அறிந்த வகையில், இந்த மரம் பல ஆயிரம் ஆண்டுகளாக புனிதமானதாக போற்றப்படுகிறது என்பதையும், சிவனுக்கு அர்ப்பணம் செய்யப்படும் மலர்களாக மட்டுமல்லாமல், வில்வ இலைகள் இல்லாமல் பூஜை முழுமை அடையாது என்பதையும் நாம் அறிந்தது, ஆனால் வில்வ இலையானது பூஜைகளுக்கு மட்டுமில்லாமல் மருத்துவ குணங்களும் நிறைந்தது என்று எத்தனை நபர்களுக்கு தெரியும்.

வில்வ இலையானது நம் உடலில் பல பிரச்சனைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலசிக்கல் பிரச்சனை இருக்காது. இன்னும் பலபிரச்சனைகளை சரி செய்ய கூடியது. இதனை பற்றிய முழு விவரத்தையும் அறிந்து கொள்வோம்.

மூச்சுத்திணறல்:

வில்வ இலை நன்மைகள்

 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஆஸ்துமா பிரச்சனையினால் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுகின்றனர். இதற்கு வில்வ இலை நீரை குடித்து வரலாம். ஒரு சொம்பு தண்ணீரில் 10 வில்வ இலைகளை சேர்த்து கொள்ள வேண்டும். இதனை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற விட வேண்டும். காலையில் இந்த நீரை குடித்து வந்தால் மூச்சு திணறல் பிரச்சனை இருக்காது.

வெறும் வயிற்றில் தேங்காய் பால் சாப்பிடலாமா?

பூச்சி இல்லாமல் இருக்க:

வில்வ இலை நன்மைகள்

குடலில் பூச்சிகள் இருந்தால் சரியாக பசிக்காது, உடல் எடையும் குறைந்து கொண்டே இருக்கும். பூச்சி பிரச்சனையை தவிர்ப்பதற்கு மருந்துகள் எடுத்து கொள்வார்கள். ஆனால் நம் முன்னோர்கள் கீரைகள் மற்றும் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி குடலை சுத்தம் செய்தார்கள்.

வில்வ இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் மிளகு தூள் சேர்த்து தேன் கலந்து குடிக்கலாம். இதனை குடிப்பதால் வயிற்றில் உள்ள புழுக்கள் நீங்குவதற்கு உதவி செய்கிறது.

தலைவலி:

வில்வ இலை நன்மைகள்

 

தலைவலி என்பது பலரும் சந்திக்க கூடிய பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு மருந்தாக உட்புறம் எடுத்து கொள்வதை விட வெளிப்புறம் தான் எடுத்து கொள்வோம். சில பேர் தைலம் மற்றும் பற்று போன்றவை போடுவார்கள்.

தலைவலி பிரச்சனைக்கு வில்வ இலையை எடுத்து அரைத்து அதிலிருந்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். இந்த சாற்றை நெற்றியில் பற்றாக போட வேண்டும், இதனால் தலைவலி குறைந்து விடும்.

தோல் பிரச்சனை:

வில்வ இலை நன்மைகள்

நம் முன்னோர்களின் காலத்தில் சரும பிரச்சனைகளுக்கு மூலிகை செடியை தான் மருந்தாக பயன்படுத்தினார்கள். அதனால் வில்வ இலையை சிறிதளவு, வேப்பிலை சிறிதளவு, உப்பு சிறிதளவு, மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை தோலில் பிரச்சனை உள்ள இடத்தில் அப்ளை செய்ய வேண்டும். ஒரு 15 நிமிடம் கழித்து அந்த இடத்தை கழுவ வேண்டும். இப்படி செய்தால் ஏதும் சரும பிரச்சனை இருந்தால் நீங்கி விடும்.

இந்த பிளேட் குருப் உள்ளவர்கள் சிக்கன் சாப்பிடுவதற்கு முன் இத தெரிஞ்சிக்கோங்க..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement