வைட்டமின் C சத்து நிறைந்துள்ள பழங்கள் எது எது தெரியுமா..?

Advertisement

வைட்டமின் சி நிறைந்த பழம்

பொதுவாக அனைவருடைய வீடுகளிலும் சாப்பிடும் போது சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை தான் சாப்பிடுவார்கள். ஏனென்றால் அப்போது தான் நம்முடைய உடல் ஆனது ஆரோக்கியமாக இருக்கும் என்பது நமக்கு தெரிந்த ஒன்று. அந்த வகையில் நம்முடைய உடலுக்கு கால்சியம், பொட்டாசியம், இரும்புசத்து, வைட்டமின் A, வைட்டமின் C மற்றும் வைட்டமின் D என இதுபோன்ற சத்துக்கள் அனைத்தும் இன்றையமையாத ஒன்றாக உள்ளது. இத்தகைய சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவுகள் என்ன தனித்தனியாக உள்ளது. ஆகவே இன்று வைட்டமின் C நிறைந்துள்ள பழங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்

Vitamin C Fruits:

பப்பாளி:

பப்பாளி

வைட்டமின் C நிறைந்த உணவுகளில் பப்பாளி பழமும் ஒன்று. பப்பாளி பழம் மட்டும் இல்லாமல் அதில் இருந்து தயாரிக்கக்கூடிய பப்பாளி ஜூஸிலும் பல வகையான சத்துக்கள் நிறைந்து உள்ளது.

அந்த வகையில் நாம் 145 கிராம் உள்ள ஒரு பப்பாளி பழத்தினை நாம் சாப்பிட்டோம் என்றால் நமக்கு 88 மில்லி கிராம் அளவுள்ள வைட்டமின் C சத்து ஆனது கிடைக்கிறது.

எலுமிச்சை பழம்:

எலுமிச்சை பழம்

எலுமிச்சை பழத்தினை நாம் அதிகமாக பார்த்து இருப்போம். இதனை நாம் ஜூஸ் போட்டு குடிப்பதற்காக தான் அதிகமாக பயன்படுத்தி வருகிறோம்.

அந்த வகையில் தோலுடன் உள்ள எலுமிச்சை பழத்தில் 83 மில்லி கிராம் வைட்டமின் C சத்து இருக்கிறது. இதனை நாம் ஜூஸாக குடிக்கும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

கொய்யாப்பழம்:

கொய்யாப்பழம்

கொய்யாப்பழம் உடல் எடை குறைய,  நீரிழிவு நோயினை கட்டுக்குள் வைக்க என பல வகையான பயன்பாடுகளை கொண்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் நாம் சாப்பிடும் வெறும் 100 கிராம் கொய்யாப்பழத்தில் மொத்தமாக சேர்த்து வைட்டமின் C சத்து 250 மில்லி கிராம் கிடைக்கிறது.

ஆகவே வைட்டமின் C சத்தினை அதிகரிப்பதற்கு கொய்யாப்பழம் சிறந்த ஒன்றாக உள்ளது.

இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள்

ஸ்ட்ராபெரி:

ஸ்ட்ராபெரி

மற்ற பழங்களை நாம் சாப்பிடும் அளவிற்கு ஸ்ட்ராபெரியினை அதிகமாக சாப்பிடுவது இல்லை. இதற்கு காரணமாக இதன் விலை அதிகமாக இருப்பதும் சொல்லபடுகிறது. ஆனால் இத்தகைய ஸ்ட்ராபெரி பழத்தில் தான் உடலுக்கு தேவையான வைட்டமின் C காணப்படுகிறது.

அதிலும் குறிப்பாக வைட்டமின் C ஆனது 152 கிராம் ஸ்ட்ராபெர்ரியில் 89 மில்லிகிராம் இருக்கிறது.

ஆரஞ்சு பழம்:

ஆரஞ்சு பழம்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆரஞ்சு பழத்தினை அப்படியே சாப்பிடுவது இல்லை. இதற்கு மாறாக ஒரு ஆரஞ்சு பழத்தில் நமது உடலுக்கு 70 மில்லிகிராம் தேவையான வைட்டமின் C சத்து ஆனது நிறைந்து இருக்கிறது.

வைட்டமின் பி12 உணவுகளும் அதன் பயன்களும்..!

 

கிவி பழம்:

கிவி பழம்

கிவி பழத்தினை நாம் அதிகமாக சாப்பிட்டு இருக்க மாட்டோம். ஆனால் இந்த கிவி பழத்தில் நமது உடலுக்கு பல சத்துக்கள் மற்றும் நன்மைகள் உள்ளது. அந்த வகையில் பார்த்தால் 56 மில்லிகிராம் வைட்டமின் C சத்து நிறைந்து உள்ளது. ஆகவே வைட்டமின் C நிறைந்துள்ள பழங்களில் இதுவும் ஒன்று.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement