தூங்கும் போது கூட உடல் எடையை குறைக்கலாமா.! ஆச்சரியமா இருக்கிறதா. எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க..

Advertisement

Weight Loss Bed Time Drink

இன்றைய கால கட்டத்தில் உள்ள உணவு முறையினால் உடல் எடை அதிகரித்து கொண்டே போகின்றது. பெரும்பாலும் உடல் எடை அதிகமாக இருக்கிறது என்பதை திருமண வயது வரும் போது தான் நினைக்கின்றனர். உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக கடையில் விற்கும் பொருட்கள் வாங்கி குடிக்கின்றனர், அல்லது மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்கின்றனர். பல முறையை பின்பற்றினாலும் உடல் எடையை குறைக்க முடிவதில்லை. அதனால் தான் இந்த பதிவில் மிகவும் எளிமையான முறையில் உடல் எடையை குறைப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உடல் எடை அதிகரிக்க காரணம்:

நிரந்தரமாக உடல் எடை குறைய

முதல் காரணமாக இரவு நேரத்தில் சரியாக தூங்காமல் இருப்பது, அப்படியே தூங்கினாலும் குறைந்த மணி நேரம் தூங்குவது போன்ற பழக்கங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்யும்.

நீங்கள் 8 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவை அதிகரிக்கிறது. கார்டிசோல் அளவு அதிகரித்தால் குடலில் உள்ள நுண்ணியிர்களை பாதிக்க செய்து வளர்சிதை மாற்றங்களை குறைக்கிறது. தூங்கும் நேரத்தில் ஹார்மோன்களில் பிரச்சனை ஏற்படுத்தி ஜங்க் உணவுகளை சாப்பிட தூண்டுகிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து உடை எடையை அதிகரிக்க செய்கிறது.

உடலை எடையை குறைக்க உதவும் இரவு பானம்:

இஞ்சி டீ:

உடல் எடை குறைய இரவு உணவு

இஞ்சியில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்பை கொண்டுள்ளது. நீங்கள் சாப்பிடும் உணவை விரைவாக ஜீரணிக்க இஞ்சி உதவுகிறது, மேலும் உங்கள் வயிறு மற்றும் சிறுகுடல் வழியாக உணவை மிக விரைவான வேகத்தில் செல்ல தூண்டுகிறது. நீங்கள் உண்ணும் உணவில் இருந்து உங்கள் உடலால் உறிஞ்சப்படும் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுகிறது.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும், பசியின் உணர்வை தடுக்கவும் இஞ்சி டீயை உதவுகிறது.

இஞ்சியை சிறிதாக கட் செய்து 3 கப் தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடவும். இதனை வடிக்கட்டி சர்க்கரை சேர்த்து இரவு தூங்குவதற்கு முன்பு குடிக்கவும்.

இந்த ஜூஸ் குடிப்பதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் இருக்கா..

வெந்தய தண்ணீர்:

உடல் எடை குறைய இரவு உணவு

வெந்தய தண்ணீரில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது, இதனால் உங்களின் பசியை அகட்டுப்படுத்தும், கலோரிகளும் அதிகமாக உள்ளது.

வெந்தயத்தை இரண்டு முறைகளில் பயன்படுத்தலாம்.

ஒன்று 2 தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்து ஒரு கப் தண்ணீரில் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். இதை வடிக்கட்டி சர்க்கரையை சேர்த்து இரவு தூங்குவதற்கு முன்பு குடிக்கலாம்.

மற்றொரு  முறை தேவையான அளவு வெந்தயத்தை எடுத்து ஊற வைத்து கொள்ளவும். இந்த தண்ணீரை தூங்க செல்வதற்கு முன்பு குடிக்கவும்.

30 நாட்களில் 5 கிலோ வரை உடல் எடை அதிகரிக்க வேண்டுமா..? அப்போ வாழைப்பழத்துடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிடுங்க போதும்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips

 

Advertisement