ஒரே வாரத்தில் தொப்பை கரைந்து காணாமல் போக இந்த ட்ரிக்கை குடியுங்கள்..!

Advertisement

Weight Loss Remedy Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய கால கட்டத்தில் உடல்பருமன் என்பது மிக பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த பிரச்சனையை ஆண்கள் பெண்கள் என அனைவரும் சந்திக்கின்றன இதற்கு முக்கிய காரணம் ஒழுங்கற்ற உணவு முறை, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, ஒழுங்கற்ற வாழ்க்கை முறை என்று பல காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். உடல் எடையை குறைப்பதில் உலகளாவிய மக்கள் அனைவருக்கும் கருத்து ஒன்று தான். ஏதாவது ஒரு விதத்தில் குறைந்தபட்சம் 5 முதல் 10 கிலோ எடையாவது குறைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகின்றன. இதன் காரணமாக அதற்கான விஷயங்களை தேடி தேடி படிக்கிறார்கள், முயற்ச்சியில் இறங்குகிறார்கள். ஒரு சிலர் இந்த முயற்சியில் மிக பெரிய வெற்றியை பெற்றுவிடுகிறார்கள். அந்த வகையில் நீங்கள் தொப்பையை குறைக்க முயற்சி செய்யும் நபராக இருந்தால் உங்களுக்கான பதிவு தான் இது. இன்று நாம் தொப்பையை குறைக்க ஒரு பானம் தயார் செய்யும் முறையை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். மேலும் அதனுடன் பின்பற்ற வேண்டிய விஷயங்களை பற்றியும் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க பதிவை முழுமையாக படித்து பயன்பெறலாம்.

தேவையான பொருட்கள்:

  • ஓமவல்லி இலை – 6
  • இஞ்சி – 1/2 துண்டு
  • பெருங்காய தூள் – ஒரு சிட்டிகை
  • உப்பு – ஒரு சிட்டிகை
  • வெந்நீர் – ஒரு கிளாஸ்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எவ்வளவு தூரம் பைக்கில் செல்லவேண்டும் தெரியுமா..? இனி இவ்வளவு தூரம் போகாதீர்கள்..!

செய்முறை:

ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஓமவல்லி இலை, இஞ்சி 1/2 துண்டு, பெருங்காய தூள் ஒரு சிட்டிகை மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் ஒரு கிளாஸ் வெந்நீரில் அரைத்த கலவையை சேர்த்து நன்றாக கலந்துவிடவும். பின் உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து கலந்துகொள்ளவும்.

அவ்வளவு தான் இப்பொழுது பானம் தயாராகிவிட்டது. இந்த பானத்தை காலை எழுந்ததும் பல் துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை அருந்தி வர உங்கள் வயிற்றில் இருக்கும் தொப்பை கரைந்து காணாமல் போய்விடும்.

நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் – Weight Loss Remedy Tamil:

பொதுவாக நாம் பார்க்கும் வேலைகளை பொறுத்து தான் நாம் சாப்பிடும் உணவின் அளவும் இருக்க வேண்டும். அதாவது அதிகமாக வேலை பார்ப்பவராக இருந்தால் அதிகமாக சாப்பிட வேண்டும். அதுவே குறைவாக வேலை பார்ப்பவராக இருந்தால் குறைந்த அளவு தான் சாப்பிட வேண்டும்.

இரவு நேரங்களில் சீக்கிரம் ஜீரணமாக கூடிய உணவுகளை மட்டும் தான் சாப்பிட வேண்டும்.

இரவு நேரங்களில் எண்ணெயில் செய்யப்பட்ட உணவுகள், அசைவ உணவுகள் இது போன்ற உணவு சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இரவு உணவை பொறுத்தவரை உறங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சாப்பிட்ட பிறகு நடப்பவரா நீங்கள்.! அப்போ இதையும் தெரிஞ்சுக்கோங்க..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil
Advertisement