What Do You Eat When You are Hungry in The Middle of the Night in Tamil
பொதுவாக நம் அனைவருக்கும் உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அதேபோல் இரவு நேரத்தில் நம் உடலுக்கு நல்ல உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நமக்கு தூக்கமின்மை அதிகமாக ஏற்படுத்தும். அதேபோல் சிலருக்கு இரவு நேரத்தில் சாப்பிடாமல் இருப்பார்கள். ஆனால் உண்மையில் சாப்பிடாமல் இருக்க கூடாது. அதேபோல் சிலருக்கு இரவு நேரத்தில் சாப்பிட்டும் நள்ளிரவில் முழிப்பு வந்துவிடும். அப்போது ஏதாவது சாப்பிடுவார்கள். சிலர் என்ன சாப்பிடுவது என்று தெரியாமல் இருப்பார்கள். இனி உங்களுக்கு இரவு நேரத்தில் பசித்தால் என்ன சாப்பிடவேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!
What Do You Eat When You are Hungry in The Middle of the Night in Tamil:
கிவி பழம்:
கிவி பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. ஆனால் இதனை சாப்பிட்டால் தூக்கம் குறைந்துவிடும் என்றால் சாப்பிட வேண்டாம். இதனை நள்ளிரவில் சாப்பிட நல்ல உணவாக இருக்கும்.
இரவு சாப்பாட்டில் இந்த 5 வகையான உணவுகளை மட்டும் சாப்பிடாதீர்கள்
முட்டை:
இன்றும் பாதி பேர் வீட்டில் இரவு நேரத்தில் பசித்தால் முட்டையை தான் சாப்பிடுவார்கள். இதனை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு ஆரோக்கியம் தான். முட்டையில் 72 கலோரிகள் உள்ளது.
யோகர்ட்:
இது பாலுடன் உள்ள உணவுகள் ஆகும். இதில் கால்சிய சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் இரவில் பசியெடுத்தால் தாராளமாக யோகர்ட் சாப்பிடலாம். டிரிப்டோபான் என்ற அமினோ அமிலத்திலிருந்து மெலடோனின் தயாரிக்க நம் உடலுக்கு கால்சியம் தேவைப்படுகிறது. இது தூக்கத்தை பாதிக்காது.
வாழைப்பழம்:
இரவில் பசித்தால் அந்த நேரத்தில் சாப்பாடு செய்ய முடியாது. அந்த நேரத்தில் நாம் ஏதாவது பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். அதுவும் முக்கியமாக அதில் வாழைப்பழம் எடுத்துக் கொள்ளலாம். இது நம்முடைய உடலில் ரத்தத்தில் மெலடோனின் அளவு 4 மடங்குக்கு மேல் அதிகரிக்கின்றது. ஆகவே வாழைப்பழம் இரவு நேரத்தில் சாப்பிடலாம்.
தப்பி தவறிகூட இந்த உணவை இரவில் சாப்பிட்டு விடாதீர்கள்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |