What Drink is Good For Summer in Tamil | உடல் சூட்டை குறைக்க என்ன சாப்பிட வேண்டும்
வெயில் காலத்தில் உடல் சூடு அதிகமாக இருக்கும். இதனால் உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகள் வரக்கூடும். எனவே முடிந்தவரை உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பது மிகவும் அவசியம். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள தண்ணீர் அதிகமாக குடிக்கவேண்டும். அதுமட்டுமில்லாமல் தண்ணீருடன் சில பொருட்களை கலந்து குடிப்பதன் மூலம் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சியாக இருக்கும். எனவே வீட்டில் நாம் பயன்படுத்தும் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி வெயில் காலத்தில் உடலை எப்படி குளிர்ச்சியாக வைப்பது என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Foods That Can Be Mixed With Water For Heat Reduce in Tamil:
ரோஜா இதழ் தண்ணீர்:
கோடைகாலத்தில் ஏற்படும் அதிக வெப்பநிலை காரணமாக உடல் சூடு மற்றும் பருக்கள் வருதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே இதனை தடுக்க, ரோஜா இதழ்களை தண்ணீருடன் கலந்து இரவு முழுவதும் ஊறவைக்கவேண்டும். பிறகு, இத்தண்ணீரை மறுநாள் காலையில் எடுத்து குடிக்கவேண்டும்.
உடல் சூடு அதிகமாக இருப்பதைக் காட்டும் சில அறிகுறிகள்
நன்மைகள்:
ரோஜா இதழில் இயற்கையாகவே குளிர்விக்கும் பண்புகள் உள்ளன. இதனை நாம் தண்ணீருடன் சேர்த்து அருந்தும்போது உடல் சூடு குறைகிறது. அதுமட்டுமில்லாமல், உடலில் வெப்பநிலை அதிகரிக்கும்போது உடலில் வீக்கம் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். இதனை தடுக்க ரோஜா இதழ் தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
குங்குமப்பூ தண்ணீர்:
சிறிதளவு குங்குமப்பூ இதழ்களை தண்ணீரில் கலந்து இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். பிறகு, இத்தண்ணீரை மறுநாள் காலையில் எடுத்து அருந்தவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வெயிலினால் ஏற்படும் உடல் சூடு குறையும்.
நன்மைகள்:
குங்குமப்பூவில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளன. இதனை தண்ணீரில் கலந்து குடிப்பதன் மூலம் உடல் சூடு தணிவதுடன் சரும நிறம் சீராகவும் இருக்கிறது.
வெந்தய தண்ணீர்:
உடல் சூடு குறைய, தண்ணீரில் சிறிதளவு வெந்தயத்தை சேர்த்து குடிக்கலாம் அல்லது வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து பிறகு மறுநாள் காலையில் அருந்தலாம்.
நன்மைகள்:
வெந்தயத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. வெந்தயம் ஒரு குளிர்ச்சியான மருத்துவ பொருள் ஆகும். இது நம் உடலில் ஏற்படும் பல்வேறு உடல் சூட்டு பிரச்சனைகளை தீர்க்கிறது.
உடல் சூடு குறைய சாப்பிட வேண்டிய உணவுகள்.. How to reduce body heat in tamil..
கறிவேப்பிலை தண்ணீர்:
சிறிதளவு கறிவேப்பிலை பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வருவதன் மூலம் உடல் சூடு தணிவதோடு முடி உதிர்தல் பிரச்சனையும் நீங்கும்.
நன்மைகள்:
கறிவேப்பிலை குளிர்ச்சியான விளைவை கொண்டுள்ளது. இதனை நாம் தண்ணீருடன் சேர்த்து உட்கொள்வதன் மூலம் உடல் குளிர்ச்சியாக இருப்பதோடு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் தீரும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |