What Happens if you Don’t Drink Milk 30 Days
தினமும் காலையில் எழுந்த உடன் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்கிறார்களோ இல்லையோ ஆனால் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் என்பது சிலருக்கு இருக்கும். அந்த வகையில் ஒரு சிலருக்கு டீ அல்லது காபி என இரண்டில் ஏதாவது ஒன்றை குடிக்காமல் இருந்தாலும் அன்றைய நாள் முழுமை அடையாதது போன்ற உணர்வு தோன்றும். ஆனால் அதிலும் சிலர் பால் மட்டும் தான் குடிப்பார்கள். ஏனென்றால் பாலில் தான் அதிக சத்துக்கள் இருக்கிறது என்பதனால் அதையே தினமும் குடிப்பார்கள். தினமும் பால் குடிப்பதனால் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது தெரியும். அப்படி பார்த்தால் வெறும் 30 நாட்கள் பாலை குடிக்காமல் இருந்தால் நமது உடலில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று தெரியுமா..? ஒருவேளை இதற்கான பதில் உங்களுக்கு தெரியவில்லை என்றால் அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!
தினமும் வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டால் உடல் என்ன ஆகும் தெரியுமா
பாலில் உள்ள சத்துக்கள்:
பாலில் வைட்டமின் A, வைட்டமின் B12, வைட்டமின் C, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, துத்தநாகம், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.
அத்தகைய பால் நாம் குடிப்பதற்கு மட்டும் இல்லாமல் உணவு ரீதியாகவும் அதிக அளவு இதனை பயன்படுத்தி உணவுகள் செய்து வருகிறார்கள்.
30 நாட்கள் பால் குடிக்காமல் இருந்தால் உடலுக்கு என்ன ஆகும்..?
பாலில் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த இருந்தாலும் கூட அதனை அளவுக்கு அதிகமாகவோ அல்லது சுத்தமாக எடுத்துக்கொள்ளாமலோ இருப்பது தவறு. ஆகையால் சரியான அளவில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆகவே 30 நாட்கள் பால் குடிக்காமல் இருந்தால் கீழே சொல்லப்பட்டுள்ள பிரச்சனைகள் நமது உடலில் ஏற்படும்.
- பாலில் நமது உடலுக்கு தேவையான கால்சியம் சத்து இருக்கிறது. அந்த வகையில் 30 நாட்கள் பால் குடிக்காமல் இருப்பதினால் கால்சியம் சத்து கிடைக்காமல் எலும்புகள் பலவீனம் இல்லாமல் காணப்படும்.
- அதேபோல் பாலை குடிக்காமல் இருப்பதனால் கால்சியம் மற்றும் வைட்டமின் D சத்து என்பது கிடைக்காது. இதனால் பற்களுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது.
- மேலும் இதன் விளைவாக வயிறு சம்மந்தமான பிரச்சனை ஏற்படும். அதாவது வாயு தொல்லை மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளும் வரக்கூடும்.
30 நாட்கள் பால் குடிக்காமல் இருப்பதனால் என்ன நன்மை:
ஒருவேளை உங்களுக்கு பால் சார்ந்த பொருட்கள் சாப்பிடுதல் மற்றும் பாலில் உள்ள கொழுப்பு சத்து காரணமாக முகத்தில் ஏதேனும் சரும கோளாறுகள் இருந்தால் பால் குடிக்காமல் இருப்பதனால் சில முன்னேற்றங்கள் காணப்படலாம்.
ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கலாம்..?
ஒரு நாளைக்கு பால் குடிக்கும் விதம் என்பது ஒவ்வொருவரின் வயதினை பொறுத்து அமைகிறது. அதனால் தோராயமாக வயதில் பெரியவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பால் குடிக்கலாம்.
மேலும் குழந்தைகளை பொறுத்தவரையும் அவர்களின் உடல் நலத்திற்கு ஏற்றவாறு தான் குடிக்க வேண்டும்.
ஆகவே மருத்துவரின் ஆலோசனை படி யாராக இருந்தாலும் பாலினை சரியான முறையிலும் அளவிலும் குடிப்பது உடலுக்கு நல்லது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |