What Happens if You Don’t Eat Rice For a Month
உணவு சாப்பிட்டால் தான் நாம் ஆரோக்கியமாகவும், உயிருடனும் வாழ முடியும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில் நாம் சாப்பிடும் உணவில் நமக்கு பிடித்ததை சாப்பிடுவது போல சத்துக்கள் நிறைந்து இருப்பதையும் சாப்பிடுவது நல்லது. அதேபோல் ஏதோ ஒரு உணவில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்துக்கொண்டு அதனை மட்டும் அதிகமாக சாப்பிடுவதும் தவறு. ஏனென்றால் நாம் எதையும் அளவோடு தான் சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக மாறிவிடும். அதுமட்டும் இல்லாமல் நாம் சாப்பிட்டு கொண்டிருக்கும் சில அத்தியாவசியான உணவுகளை திடீரென்று சாப்பிடாமல் விட்டாலும் கூட அது உடலில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும். அந்த வகையில் நாம் ஒரே ஒரு மாதம் மட்டும் சாதம் சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆகும் என்பதை பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.
ஒரே 1 மாதம் சாப்பாட்டில் உப்பு சேர்க்காமல் இருந்தால் என்ன ஆகும் தெரியுமா..
சாதத்தில் உள்ள சத்துக்கள்:
அரிசியினை வேக வைத்தப்பிறகு கிடைக்கும் சாதத்தில் புரதம், கொழுப்பு சத்து, கார்போஹைட்ரேட், போலேட், கலோரிகள், நார்ச்சத்து, கலோரிகள் மற்றும் வைட்டமின் B என இத்தனை விதமான சத்துக்கள் இருக்கிறது.
சாதம் 1 மாதம் சாப்பிடாவிட்டால் ஏற்படும் விளைவுகள்:
நாம் அன்றாடம் சாப்பிடும் அரிசியில் பல சத்துக்கள் இருந்தாலும் கூட சில வைட்டமின்கள் மற்றும் மாவுச்சத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ஆனால் இத்தகைய சத்துக்கள் இல்லை என்றாலும் கூட நாம் சாதம் சாப்பிட்டு வந்து கொண்டிருக்கின்றோம். திடீரென்று 1 மாதம் சாதம் சாப்பிடாவிட்டால் என்ன ஆகும்..?
- 1 மாதம் நாம் சாதம் சாப்பிடாமல் இருப்பதனால் இருப்பதனால் நமது உடல் எடை ஆனது மிகவும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். ஏனென்றால் ம் நமது உடலுக்கு போதிய அளவு கலோரிகள் கிடைக்காமல் போவதே காரணமாகும்.
- இதில் கார்போஹைரேட் நிறைந்த இருப்பதனால் இதனை நாம் தவிர்க்கும் போது உடலில் இரத்த சர்க்கரையின் அளவு என்பது படிப்படியாக குறையத்தொடங்கும்.
- மேலும் நமது உடலுக்கு தேவையான புரதம் மற்றும் கலோரிகள் கிடைக்காமல் போவதனால் உடல் சுறுசுறுப்பாக இல்லாமல் ஆற்றல் குறைந்து காணப்படும்.
- அதேபோல் உடல் தசைகள் அனைத்தும் வலுவிழந்து காணப்படும் பிரச்சனை ஆனது சாதம் சாப்பிடாமல் இருப்பதனால் ஏற்படும்.
மேலே சொல்லப்பட்டுள்ள விளைவுகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள ஸ்ரீ பாலாஜி ஆக்ஷன் மெடிக்கல் இன்ஸ்டிடியூட் ஊட்டச்சத்து துறையின் தலைவர் பிரியா பர்மா கூறியிருக்கிறார்.
ஒரு நாளைக்கு எவ்வளவு அரிசி:
அதனால் நாம் முற்றிலும் சாதம் சாப்பிடாமல் இருப்பதை விட சரியான அளவில் சாதம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஆகவே 1 கப் சாதத்துடன் சேர்த்து காய்கறிகளை சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நன்மையினை அளிக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |