உப்பு 1 மாதம் சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆகும் தெரியுமா
நாம் செய்யும் சாப்பாடு எதுவாக இருந்தாலும் அதற்கு கூடுதலான சுவையினை சேர்ப்பது உப்பு தான் என்பது நமக்கு தெரியும். ஏனென்றால் உப்பில்லா ஒரு இட்லியை கூட சாப்பிட முடியாது. அதேசமயம் உப்பு அதிகமாக இருக்கும் சாப்பாட்டினையும் நம்மால் சாப்பிடவே முடியாது. அதுமட்டும் இல்லாமல் உப்பு அதிகமாக இருக்கும் சாப்பாட்டினை சாப்பிடுவதன் மூலம் உடலில் ஒரு சில பிரச்சனைகளும் வருகிறது. இத்தகைய பிரச்சனையினை எண்ணி பெரும்பாலான வீடுகளில் அரை உப்பு போட்டு தான் சமையல்கள் அனைத்தும் சமைக்கப்படுகிறது.
அதன் படி பார்த்தால் உப்பு அதிகமாக இருக்கும் சாப்பாட்டினையோ அல்லது மற்ற எதையும் சாப்பிட்டால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது தெரியும். அந்த வகையில் 1 மாதம் மட்டும் உப்பு சாப்பிடாமல் இருந்தால் என்ன மாதிரியான மாற்றங்கள் அல்லது விளைவுகள் ஏற்படும் என்று உங்களுக்கு தெரியுமா..? ஒருவேளை இதுநாள் வரையிலும் தெரியாவில்லை என்றால் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உப்பில் உள்ள சத்துக்கள்:
ஒரு உணவின் சுவையினை நன்றாக இருக்க செய்வதற்கு, அதேசமயம் அந்த உணவினை சுவை தெரியாமல் மாற்றுவது உப்பு தான். இப்படிப்பட்ட உப்பில் சிங்க், இரும்புசத்து, காப்பர், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.
What Happens if You Don’t Eat Salt for a Month:
1 மாதம் நாம் தொடர்ச்சியாக உப்பு எடுத்துக்கொள்ளவில்லை என்றால் கீழே கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் அனைத்தும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
- உப்பு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதனால் நமது உடலில் நீர்சத்து மற்றும் ஈரப்பதம் ஆனது படிப்படியாக குறையத்தொடங்கும்.
- அதேபோல் உப்பு நமது உடலுக்கு சோடியம் சத்தினை அளிக்கிறது. இதனை நாம் சாப்பிடாமல் இருப்பதனால் இரத்த அழுத்தம் ஆனது குறையும்.
- இதற்கு அடுத்த நிலையாக சாப்பாட்டில் எந்த ஒரு சுவையும் தெரியாமல் போகும் நிலை ஏற்படும்.
- மேலும் நீர்சத்து குறைய குறைய மயக்கம், வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளும் வரும்.
- அதுமட்டும் இல்லாமல் உடல்பில் எலக்ரோலைட் அளவு பாதிக்கப்பட்டு நரம்பு மற்றும் தசைகளின் செயல்பாடு வழக்கமாக இல்லாமல் பாதிக்கக்கூடும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு:
ஒரு மனிதனின் உடலில் எந்த விதமான பிரச்சனைகளும் இல்லாமல் இருந்தால் ஒரு நாளைக்கு சுமார் ஒரு ஸ்பூன் அல்லது 5 கிராம் அளவு உப்பினை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை கல்லீரல், நுரையீரல் மற்றும் இதய பிரச்சனைகள் என இதுபோன்றவை காணப்பட்டால் மருத்துவர் கூறிய அளவில் உப்பினை சரியான அளவில் எடுத்திக்கொள்வது நல்லது.
ஆகவே 1 மாதம் வரை உப்பு எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் அது நமது உடலுக்கு பெரிய பிரச்சனையினை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |