தினமும் வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டால் உடல் என்ன ஆகும் தெரியுமா..?

Advertisement

What Happens if You Eat Only Fruits For a Day  

வணக்கம் நண்பர்களே..! இன்றைய ஆரோக்கிய பதிவிலும் ஒரு பயனுள்ள பதிவினை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது நம்மால் தினமும் சாப்பாடு மற்றும் தண்ணீர் குடித்து வந்தால் மட்டுமே தான் உயிர் வாழ முடியும் என்று நமக்கு தெரியும். அதனால் நாம் அனைவரும் தினமும் நமக்கு பிடித்த மற்றும் ஆரோக்கியமான உணவகளை சாப்பிட்டு வருகிறோம். இவ்வாறு நாம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் பட்சத்தில் திடிரென்று தினமும் வெறும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டு  வந்தால் நமது உடல் என்ன ஆகும் என்று நீங்கள் ஒரு நாளாவது யோசித்தது உண்டா..? ஒருவேளை இத்தகைய சிந்தனை உங்களுக்குள் தோன்றி அதற்கான பதில் கிடைக்காமல் இருந்தால் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஏனென்றால் இந்த பதிவில் தினமும் நாம் பழம் மற்றும் காய்கறிகளை  சாப்பிடுவதனால் என்ன ஆகும் என்பது பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

கருப்பு உளுந்தை சாப்பாட்டில் அதிக அளவு சேர்த்து கொள்வதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா

பழங்களில் உள்ள சத்துக்கள்:

பழங்களில் மெக்னீசியம், பொட்டாசியம், நார்சத்து மற்றும் சோடியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. இத்தகைய சத்துக்கள் இல்லாமல் பிற சத்துக்களும் இதில் உள்ளது. இவை அனைத்தும் நமது உடலில் ஒவ்வொரு மாதிரியான நன்மைகள் அளிக்கிறது.

பழங்களை மட்டும் சாப்பிட்டால் என்ன ஆகும்..?

what happens when you eat only fruits for a day in tamil

  •  சாப்பாடு சாப்பிட்டு விட்டு திடிரென்று தினமும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது அல்ல. அதாவது தினமும் பழங்களை மட்டும் சாப்பிடுவதனால் உடல் எடை ஆனது அதிகரிக்க அல்லது இழைக்கும் வாய்ப்பு என்பது அதிகமாக இருக்கிறது.
  • அதேபோல் சில பழங்களில் சர்க்கரை சத்து அதிகமாக இருப்பது நமக்கு தெரியும். அதனால் நாம் தினமும் பழங்களை மட்டும் சாப்பிடுவதனால் இரத்த சர்க்கரையின் அளவு ஆனது அதிகரிக்கக்கூடும்.
  •  புரதசத்து மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் தினமும் பழங்களை மட்டும் சாப்பிட்டு வருவதனால் நமது உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைக்காமல் போகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
  • உணவுகளை சாப்பிடாமல் பழங்கள் மட்டும் சாப்பிடுவதால் உடலில் கலோரிகளின் அளவு குறைந்து உடல் சோர்வு மற்றும் மனது சோர்வு அடையக்கூடும்.
  • சாப்பாடு எடுத்துக்கொள்ளாமல் பழங்களை எடுத்துக்கொள்வது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை படிப்படியாக குறைக்க உதவுகிறது.
  • அதோடு மட்டும் இல்லாமல் உடல் தசை மற்றும் எலும்புகளிலும் பிரச்சனைகள் வரக்கூடும். 

ஆகவே பழங்கள் நமது உடலுக்கு நன்மையினை அளித்தாலும் கூட அதனை அளவோடு தான் சாப்பிட வேண்டும். அதேபோல் தினமும் பழங்களை மட்டும் சாப்பிடுவதும் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும்.

ஒரே 1 மாதம் சாப்பாட்டில் உப்பு சேர்க்காமல் இருந்தால் என்ன ஆகும் தெரியுமா 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement