உப்பு அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் இடம், உடை,நீர், காற்று, உணவு போன்றவை முக்கியமான ஆதாரமாக இருக்கிறது. இவை எல்லாம் ஒரு மணி நேரம் இல்லாமல் கூட நம்மால் இருக்க முடியாது. உணவை பலரும் பல விதமாக சாப்பிடுவார்கள். அறுசுவைகளில் காரம், இனிப்பு இவை இரண்டும் எல்லா உணவுக்கு பொதுவானது. அதாவது காரமும், இனிப்பும் சில பேர் அதிகமாக சாப்பிடுவார்கள், சில நபர்கள் குறைவாக சாப்பிடுவார்கள்.
இதில் உப்பை சில நபர்கள் குறைவாக சாப்பிடுவார்கள், சில பேர் உப்பை சரியாக போட்டு சாப்பிடுவார்கள், சில பேர் உப்பை ஒரு கல் அதிகமாக போட்டு சாப்பிடுவார்கள். அதனால் தான் இந்த பதிவில் உப்பை அதிகமாக சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
What Happens if You Eat Too Much Salt Daily:
நாம் தினசரி உணவில் உப்பை அதிகமாக எடுத்து கொண்டால் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை ஏற்ப்டுத்தும். உப்பு அதிகரிக்கும் பட்சத்தில் வயிற்றுப்புண், இதய சுவரில் வீக்கம், சிறுநீரக கோளாறு, சிறுநீரகக்கல் பாதிப்புகள் ஏற்படும். ரத்தத்திலும் உப்புச்சத்து அதிகரிக்கும். எலும்பின் அடர்த்தியும் குறையும். சில நோய்கள் தாக்கும் போது உப்புச்சத்து அதிகரிப்பால் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புண்டு.
சாதம் சாப்பிடுவதை 1 மாதம் மட்டும் நிறுத்தினால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் தெரியுமா..?
அதிக உப்பு எடுத்து கொள்வது நமது இரத்த நாளத்தில் உட்புறம் கொழுப்பாக அமைகிறது. மேலும் நீங்கள் உடல் பருமன், சர்க்கரை நோய், சிறுநீரக பிரச்சனை போன்றவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் உப்பை அதிகமாக எடுத்து கொள்ளும் பிரச்சனையை அதிகப்படுத்தும். உப்பை அதிகமாக எடுத்து கொள்ளும் போது எலும்பு பிரச்சனை ஏற்படுகிறது. உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்களை சோடியமானது எலும்பில் இருக்கும் கால்சியம் சத்தை உறிஞ்சி விடுகிறது.
ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு சாப்பிட வேண்டும்:
ஒரு நாளைக்கு 2.3 கிராம் அல்லது 5 கிராம் வரை சோடியம் உடலுக்கு தேவையானது. அதற்கு மேல் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். துரித உணவுகளில் உப்பு அதிகமாக இருக்கிறது. அதனால் அதை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பீட்ஸா, பர்கர், சாண்ட்விச், சீஸ், சிப்ஸ் ரகங்கள் நொறுக்குத்தீனிகளில் உப்பு அதிகமாக இருக்கின்றது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |