முட்டை பிரிட்ஜில் வைக்கலாமா
இப்போது பெரும்பாலான வீடுகளில் பிரிட்ஜ் இருப்பதனால் பலரும் அதனை அவர் அவருக்கு ஏற்ற மாதிரி பயன்படுத்துகிறார்கள். அதாவது பழங்கள், காய்கறிகள், சமைத்த உணவுகள் மற்றும் சமைக்க தயார் படுத்தி வைத்துள்ளா உணவுகள், மளிகை பொருட்கள் என இவற்றை எல்லாம் வீணாகாமல் இருக்க வேண்டும் என்று பிரிட்ஜில் வைக்கிறார்கள். இத்தகைய வரிசையில் தற்போது முட்டையினையும் வைக்கிறார்கள். ஆனால் பலருக்கும் பிரிட்ஜில் முட்டை வைக்கலாமா..? அல்லது வைக்கக்கூடாதா..? என்ற சந்தேகம் இருக்கிறது. அதோடு மட்டும் இல்லாமல் முட்டையினை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.
உருளைக்கிழங்கை சாப்பிடுவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா
முட்டையில் உள்ள சத்துக்கள்:
முட்டையில் வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் C, புரதம், பொட்டாசியம்,கால்சியம், மெக்னீசியம், சோடியம், புரோட்டின், இரும்புசத்து, கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால் என பல வகையான சத்துக்கள் நிறைந்தது இருக்கிறது.
முட்டையை பிரிட்ஜில் வைத்தால் என்ன ஆகும்..?
முட்டையை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது என்பது அவ்வளவு நல்லது அல்ல. அதாவது முட்டையை பிரிட்ஜில் வைப்பதன் மூலம் முட்டை குளிர்ச்சி அடைந்து அதன் மேலே கெடுதல் விளைவிக்கக்கூடிய பாக்டீரியா பரவக்கூடும்.
அதன் பின்பு அந்த பாக்டீரியா தொற்று முட்டையின் மேல் இருந்து உள்ளே சென்று முட்டை வீணாகி விடும் என்று ஆய்வின் படி கூறப்படுகிறது.
ஆகவே முட்டையினை பிரிட்ஜில் வைப்பதன் மூலம் அது வீணாகி சுத்தமாக சாப்பிட முடியாத ஒரு பொருளாக மாறிவிடும். மேலும் அதனை சாப்பிடுவதும் நமது உடலுக்கு அவ்வளவு நல்லது அல்ல.
எனவே முட்டையை பிரிட்ஜில் வைக்காமல் வெளியில் காற்று ஓட்டமான பகுதிகளில் வைப்பது நல்லது.
முட்டை தீமைகள்:
- சாதாரணமாக முட்டையினை நாம் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் சில தீமைகளை ஏற்படுத்தும்.
- முட்டையை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதனால் மலச்சிக்கல், வயிற்று போக்கு மற்றும் வாந்தி போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.
- அதேபோல் அளவுக்கு அதிகமாக முட்டையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது என்பது உடலின் இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்க செய்யும்.
- மேலும் செரிமான பிரச்சனையினை மற்றும் வாயு தொல்லை என இதுபோன்ற பிரச்சனைகளும் இதன் மூலமாக வரக்கூடும்.
- தினமும் அதிகளவு உணவில் முட்டை சாப்பிட்டால் இதில் உள்ள கொழுப்புகள் கெட்ட கொழுப்புகளாக நமது உடலில் மாறி இதய சம்மந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்தும்.
தினமும் ஒரு கையளவு பச்சை திராட்சை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |