இனி விக்கல் வந்தால் இப்படி மட்டும் செய்யாதீர்கள்..!

Advertisement

இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்

நண்பர்களுக்கு வணக்கம்..! நம் பதிவின் வாயிலாக தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று மேல் படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். சரி பொதுவாக இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் சில விஷயங்கள் ஓன்று போல் இருக்கும். அதாவது அழுகை, சிரிப்பு, கோவம், கவலை, இருமல், தும்மல், விக்கல் இது அனைத்து மனிதர்களுக்கும் வருவது இயற்கை தான்..! ஆனால் இந்த விக்கல் வந்தால் மட்டும் ஏனோ பலரும் பதற்றம் சிலர் விக்கல் ஏற்படும் நேரத்தில் ஏதாவது ஏடாகூடமாக செய்வார்கள். அதனால் தான் நம் பதிவில் விக்கல் ஏற்படும் போது செய்ய கூடாத செயல்கள் என்னவென்று பதிவை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

விக்கல் எதனால் வருகிறது.. அதனை நிறுத்துவது எப்படி

விக்கல் வந்தால் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்..? 

 what not to do if you have hiccups

மனிதனாக பிறந்த அனைவருக்குமே தும்மல், விக்கல், இருமல் வருவது இயற்கை தான். ஆனால் இதை நோய்கள் என்றும் சொல்வார்கள். அதிலும் இருமல் தும்மல் சளி பிடித்தால் மட்டும் தான் வரும். ஆனால் இந்த விக்கல் அப்படி கிடையாது. விக்கல் எதனால் வருகிறது..? அதற்கு என்ன காரணம் என்று நாமும் ஒவ்வொரு முறையும் யோசித்திருப்போம்.

அப்படி விக்கல் வர என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 விக்கல் வருவதற்கான காரணம் என்ன தெரியும்

சரி விக்கல் எதனால் வருகிறது என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள். இப்போது நாம் விக்கல் வரும் போது செய்யக்கூடாத விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம் வாங்க.

பொதுவாக விக்கல் என்பது சிலருக்கு எப்போதாவது வரும். ஆனால் சிலருக்கோ அடிக்கடி வரும்.

  1. அப்படி விக்கல் வரும் நேரத்தில் சூடான தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதுபோல டீ, காபி போன்ற சூடான பானங்கள் மற்றும் சூடான உணவுகள்  சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மீறி சூடான உணவுகள் சாப்பிட்டால் விக்கல் அதிகமாக வர வாய்ப்புள்ளது. அதனால் விக்கல் எடுக்கும் போது சூடான பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் ஆல்ஹகால் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  2. ஒருவருக்கு விக்கல் அடிக்கடி வந்தால், அவர் விக்கல் ஏற்படும் போது காரமான உணவுகள் உண்பதை தவிர்ப்பது நல்லது. காரணம் விக்கல் ஏற்படும் போது,  காரமான உணவுகள் சாப்பிட்டால், அது உணவு குழாயில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் குமட்டல், வாந்தி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
  3. அதுபோல விக்கல் எடுக்கும் போது என்ன சாப்பிட்டாலும் அதை மெதுவாக சாப்பிட வேண்டும். மேலும் சூயிங்கம் மெல்லுவது மற்றும் புகைபிடிப்பது போன்ற செயல்கள் செய்வதையும் தவிர்ப்பது நல்லது.

எனவே விக்கல் ஏற்படும் போது இதுபோன்ற செயல்களை செய்யாதீர்கள். மேலும் ஒருவருக்கு விக்கல் அதிகமாக வந்தால் எலுமிச்சை பழத்தின் சாறை குடித்து வரலாம். இதனால் விக்கல் எடுப்பது சரியாகும்.

விக்கலை நிறுத்த பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement