முட்டை சாப்பிட பிறகு மறந்தும் கூட இதை மட்டும் சாப்பிடாதீங்க.. சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா.?

Advertisement

What Should Not Be Eaten with Egg

நீங்கள் தினமும் வேகவைத்த முட்டையை சாப்பிடும் பழக்கம் உள்ளவரா அப்போ இந்த விஷயங்களை எல்லாம் கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள். முட்டையில் நம் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்கள் உள்ளதால் அதனை நாம் அனைவருமே சாப்பிடுவோம். இதனால் எந்த தவறும் இல்லை. ஆனால் முட்டையை சரியான முறையில் உட்கொள்ள வேண்டும். அதாவது முட்டை சாப்பிடும்போது சில உணவு பொருட்களை நாம் சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் நம் உடலில் அது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. எனவே முட்டை சாப்பிட பிறகு தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள் என்னவென்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

முட்டை சாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாத உணவு பொருட்கள்:

எலுமிச்சை பழம்:

எலுமிச்சை பழம்

பெரும்பாலோர் அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு, எலுமிச்சை பழம் சாப்பிட விரும்புவார்கள். அதேபோல், முட்டை சாப்பிட பிறகும் எலுமிச்சை சாப்பிடுவார்கள். ஆனால் இப்படி சாப்பிடுவது மிகவும் தவறானது.

ஏனென்றால் வேகவைத்த முட்டை சாப்பிட்ட பிறகு, எலுமிச்சை சாப்பிடுவதால் இரத்த நாளங்கள் அதிகம் பாதிக்கப்படும். இதனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் ஏற்படுகிறது.

வாழைப்பழம்:

வேகவைத்த முட்டை சாப்பிட்ட பிறகு வாழைப்பழத்தை ஒருபோதும் சாப்பிட  கூடாது. ஏனென்றால் முட்டை சாப்பிட பிறகு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் மலசிக்கல், வாயு பிரச்சனை மற்றும் குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பாகற்காய் சாப்பிட்ட பிறகு மறந்தும் இதை மட்டும் சாப்பிடாதீங்க..! மீறி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..?

பன்னீர்:

பன்னீர்

வேகவைத்த முட்டை சாப்பிட்ட பிறகு பன்னீர் சாப்பிடுதல் கூடாது. ஏனென்றால் பன்னீர் மற்றும் முட்டை இவை இரண்டிலும் புரதம் அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

மீன்:

மீன்

வேகவைத்த முட்டை சாப்பிட்ட பிறகு மீன் சாப்பிடுதல் கூடாது. ஏனெற்றால், முட்டை சாப்பிட்ட பிறகு, மீன் சாப்பிடுவதால் சருமம் தொடர்பான பிரச்சனைகளை வரக்கூடும்.

டீ:

முட்டை சாப்பிட பிறகு அதன் வாசனையை போக்க பலரும் டீ குடிப்பார்கள். ஆனால் இது மிகவும் தவறான செயல் என்று அவர்களுக்கு தெரிவதில்லை. ஆமாம், டீயில் இருக்கும் டானிக் அமிலம் முட்டையில் இருக்கும் புரோட்டினுடன் சேர்வதால் உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும். முக்கியமாக குடல் இயங்கங்கள் பாதிப்படைந்து தேவையற்ற நச்சுப்பொருட்கள் அனைத்தும் குடலில் தங்கி பாதிப்பை ஏற்படுத்தும்.

மாத்திரை சாப்பிட்ட பிறகு இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடாதீர்கள்..

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement