உங்க குழந்தை காசை முழுங்கிவிட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

Advertisement

What To Do If Children Swallow Coins in Tamil

வாசகர்களுக்கு வணக்கம்..! குழந்தைகள் என்றால் நம் அனைவருக்குமே பிடிக்கும். அதுபோல குழந்தை என்றாலே அங்கு குறும்பு தனமும், சுட்டி தனமும் அதிகமாக இருக்கும். பொதுவாக குழந்தைகளை அனைவருமே அவ்வளவு பாதுகாப்பாக பார்த்து கொள்வார்கள். அதுவும் குழந்தைகள் முட்டிபோட்டு தவழ ஆரம்பிக்கும் போது தான் அதிக கவனம் தேவைப்படுகிறது. நம் கண்ணுக்கு தெரியாத தூசியும் மற்ற பொருட்களும் குழந்தைகள் கண்களுக்கு மட்டும் எப்படி தெரியும் என்றே தெரியாது. சட்டென்று எடுத்து பட்டென்று வாயில் வைத்து விடுவார்கள். அதுபோல குழந்தைகள் செய்யும் ஒரு விஷயம் தான் காசை விழுங்குவது. அப்படி குழந்தைகள் காசை விழுங்கிவிட்டால், என்ன செய்வது என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

வலிப்பு வந்தால் இந்த முதலுதவியை மட்டும் செய்து விடுங்கள்

குழந்தைகள் காசை விழுங்கிவிட்டால் என்ன செய்வது..? 

குழந்தைகள் காசை விழுங்கிவிட்டால் என்ன செய்வது

ஒருவேளை உங்கள் குழந்தை காசை விழுங்கிவிட்டால், பதறாமல் அந்த குழந்தையை கவனியுங்கள். குழந்தை விழுங்கிய காசு நேரடியாக வயிற்றுக்குள் சென்றுவிட்டால் எந்த பயமும் இல்லை. அது குழந்தை மலம் கழிக்கும் போது வந்துவிடும்.

ஆனால் ஓருவேளை காசு குழந்தையின் தொண்டையிலோ அல்லது உணவு குழாயிலோ சிக்கி கொண்டால் நாம் அலட்சியமாக இருக்க கூடாது. இப்படி உணவுக்குழாயில் சிக்கி கொண்டால் சில அறிகுறிகள் காணப்படும். அது என்ன அறிகுறிகள் என்று இப்போது காண்போம்.

  • வாயில் இருந்து தொடர்ச்சியாக உமிழ் நீர் வந்துகொண்டே இருக்கும்.
  • அடிக்கடி வாந்தி, குமட்டல் வரும்.
  • உணவு சாப்பிட மறுக்கும். என்ன பசி எடுத்தாலும் குழந்தை சாப்பிட மறுக்கும்.
  • குழந்தையின் நெஞ்சு அல்லது கழுத்து பகுதியில் வலி ஏற்படும். இதனால் குழந்தைகள் இடைவிடாது அழும்.
  • திடீரென்று காய்ச்சல் அடிக்க ஆரம்பிக்கும்.

ஆவாரம் பூவில் இவ்வளவு தீமைகள் உள்ளதா

ஒருவேளை காசு குழந்தையின் வயிற்றில் சிக்கி கொண்டால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்று இப்போது பார்க்கலாம்.

  • இரத்தத்துடன் மலம் வெளியேறுதல்
  • மலம் வெளியேற்றும் போது ஏற்படும் அசாதாரண சத்தம்
  • வயிற்று வலி
  • வயிற்றுப்போக்கு
  • வாந்தி, குமட்டல்

அதுபோல குழந்தைகள் காசை விழுகியதும் அவர்களை வாந்தி எடுக்க சொல்வது அல்லது உணவு உண்ணவோ அல்லது தண்ணீர் குடிக்க சொல்லியோ வற்புறுத்த வேண்டாம்.

இதுபோல குழந்தைகள் காசை விழுங்கிவிட்டால், 2 நாட்கள் வரை அவர்களுக்கு ஏதும் அறிகுறிகள் தென்படுகிறதா என்று பாருங்கள். மேலும் இந்த மாதிரி அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil 
Advertisement