Black Salt or White Salt Which is Better
சமையலில் முக்கிய பங்கு வகிப்பது உப்பு. அதாவது, உணவில் உப்பு அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் அந்த உணவினை நம்மால் சாப்பிட முடியாது. அதுமட்மில்லாமல் உடலில் அதிக அளவு உப்பு சேர்த்தால் உடலில் பல பிரச்சனைகள் வரக்கூடும். எனவே உப்பினை நாம் அளவோடு உட்கொள்ளுதல் வேண்டும். உப்பில் பல வகைகள் உள்ளது. பிங்க் உப்பு, கல் உப்பு, வெள்ளை உப்பு, கருப்பு உப்பு போன்ற பல வகைகள் உள்ளது. எனவே இபபதிவில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாம் வழக்கமாக பயன்படுத்தும் வெள்ளை உப்பு சிறந்ததா..? அல்லது கருப்பு உப்பு சிறந்ததா.? என்பதை பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
Which is Better Black Salt or White Salt in Tamil:
கடல் உப்பு:
நம் பயன்படுத்தும் வெள்ளை உப்பு கடலில் இருந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. சோடியமும் குளோரைடும் இயற்கை முறையில் வினைபுரிந்து வந்தது தான் கடல் உப்பு. ஆனால் இந்த உப்பை விட கருப்பு உப்பு தான் நம் உடலுக்கு ஆரோக்கியமானது என்று கூறுகிறார்கள். ஏன் அப்படி கூறுகிறார்கள்..? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
உப்பு அதிகம் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்குமுன்னு தெரியுமா.
கருப்பு உப்பு:
நாம் அனைவருமே வெள்ளை உப்பை தான் அதிகமாக பயன்படுத்தி இருப்போம். கருப்பு உப்பு பற்றி நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கருப்பு உப்பில் ஏராளமான தாதுக்கள், வைட்டமின்கள், இரும்பு சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன.
கருப்பு உப்பில் ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகமாகவும் சோடியம் குறைவாகவும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டே கருப்பு உப்பு உடல் நலத்திற்கு சிறந்தது என்று கூறுகிறார்கள்.
அதாவது, மனித உடலுக்கு ஒருநாளைக்கு 5 கிராம் சோடியம் மட்டுமே தேவை. ஆனால் நாம் பயன்படுத்தும் சாதாரண உப்பில் அதிக அளவு சோடியம் உள்ளது. உடலில் சோடியம் அளவு அதிகமானால் பல பிரச்சனைகள் ஏற்பட கூடும். எனவே உடல் நலத்திற்கு கருப்பு சிறந்தது.
100 கிராம் கருப்பு உப்பில் உள்ள சத்துக்கள்:
- சோடியம் – 37.83 கிராம்
- குளோரைடு – 60.3 கிராம்
- கந்தகம் – 450மி.கி
- பொட்டாசியம் – 87 மிகி
- இரும்பு – 43.1மி.கி
கருப்பு உப்பின் ஆரோக்கிய நன்மைகள்:
- செரிமான பிரச்சனையை நீக்குகிறது.
- தசைப்பிடிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
- இரத்த சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்து கொள்கிறது.
- மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகிறது.
- உடல் சோர்வை குறைக்கிறது.
- எடை பருமனை தடுக்கிறது.
எனவே இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது உடலுக்கு ஊட்டச்சத்தை அளிப்பதில் கருப்பு உப்பு முதலிடத்தில் இருக்கிறது.
கருஞ்சீரகம் ஆயிலிலில் இவ்வளவு இருக்கா.! இத்தனை நாளா தெரியாம போச்சே..
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |