இன்ஸ்டாகிராமில் ஈஸியான வழியில் பணம் சம்பாதிப்பது எப்படி?

Advertisement

இன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிக்க என்ன செய்யலாம்?

இந்த காலத்தில் மக்கள் அனைவரும் இன்ஸ்டாகிராமில் (Instagram) அதிகநேரம் செலவிடுகிறார்கள். இன்ஸ்டாகிராமில் எப்படி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எளியமுறையை பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.

இப்போதுள்ள இளைஞர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் நடைபெறும் விஷேஷங்களையோ அல்லது அவர்கள் கல்லூரியில் நடைபெறும் நிகழ்வையோ Vlog என்று இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் பதிவிடுகிறார்கள். இது மூலம் அவர்களுக்கு நிறைய Followers வருகிறார்கள் அதனால் அவர்களால் பணம் சம்பாதிக்க முடிகிறது. இது போன்று நீங்களும் உங்கள் Vlog – ஐ பதிவு செய்து Followers – ஐ பெறலாம் மற்றும் பணமும் சம்பாதிக்கலாம்.

பணம் சம்பாதிக்க எளிமையான வழிமுறைகள்:

 instagram earn money tamil

  • Advertising Products:

    ஒரு பெரிய கம்பெனி அவர்களது பொருட்களை அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பது அவர்களுடைய நோக்கமாகும். அப்போது அவர்கள்இன்ஸ்டாகிராமில்  அதிக Followers உள்ளவர்களிடம் தங்கள் பொருட்களை ஊக்குவிக்க(Promote) சொல்லுவார்கள். நீங்கள் உங்கள் இன்ஸ்டாகிராமில் அதிக Followers வைத்திருந்தால் அவர்கள் உங்களிடமும் பொருட்களை ஊக்குவிக்க(Promote) செய்யவேண்டும் என்று கேட்பார்கள். இதன் மூலம் நீங்கள் பணத்தை சம்பாதிக்கலாம்.

  • Promote Affiliate Offers:

    நீங்கள் உடல்பயிற்சி போன்ற விடியோக்களை பதிவிடுகிறிர்கள் என்றால் மற்றும் உடல்பயிற்சி சார்ந்த oats, Health Mix Powder போன்ற பொருட்களை உபயோகப்படுத்துவீர்கள் என்றால் நீங்கள் அந்த கம்பெனியிடம் ஒரு டீல்(Deal) வைத்துக்கொள்ளலாம். நான் உங்கள் Affiliate Marketing இல் சேர்ந்து கொள்கிறேன். ஒரு கூப்பன் கோட் கொடுக்கவேண்டும் என்று கேட்க வேண்டும். நீங்கள் அந்த கூப்பன் கோட் – ஐ உங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும். நீங்கள் பதிவிடும் கூப்பன் கோட் – ஐ வைத்து யாரேனும் பொருட்கள் வாங்கினால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். இது மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.

இன்ஸ்டாகிராம் Account -யை நிரந்தரமாக Delete செய்வது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா

  • Instagram Business:

    நீங்கள் ஏதேனும் பொருட்களை விற்பனை செய்கிறீர்கள் என்றால் Dress, Makeup items மற்றும் வேறு எந்த பொருளை வேண்டுமானாலும் இன்ஸ்டாகிராமிலும் விற்பனை செய்யலாம். நீங்கள் விற்பனை செய்யும் பொருட்கள் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.இன்ஸ்டாகிராமை நிறைய மக்கள் உபயோகிப்பதால் உங்கள் பொருட்களை அவர்கள் கண்டிப்பாக வாங்குவார்கள்.

  • Money From Your Content Creation:

    கம்பெனி வைத்திருப்பவர் அனைவரும் இன்ஸ்டாகிராம் வைத்திருப்பது இல்லை. அவ்வாறு இன்ஸ்டாகிராம் இல்லாத கம்பெனிகளுக்கு நீங்கள் இன்ஸ்டாகிராம் பேஜ் ஆரம்பித்து அவர்கள் பொருட்களை விளம்பரம் செய்து தரலாம். இதன் மூலியமாக உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். 

  •  Video Content Creation:

    நீங்கள் ஆறிபிளவுஸ் (Aari Blouse) தைப்பவராக இருந்தால் நீங்கள் செய்யும் வேலையை விடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடலாம். எப்படி ஆறி போட வேண்டும் என்று வெவ்வேறு விடீயோக்களை பதிவிடலாம். ஆறி மட்டுமில்லாமல் நீங்கள் எதை வேண்டுமானாலும் விடியோவாக பதிவிடலாம். இது மூலமாக நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.

இன்ஸ்டாகிராமில் இப்படி ஒரு Update ஆ..? இனி சூப்பரா விளையாடலாம்..!

  • Meme Creation:

    இந்த காலத்தில் எந்த விஷயம் நடந்தாலும் அதை Meme ஆக செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறார்கள். அது மூலம் அதிக Views -ஐ பெறுகிறார்கள். நீங்களும் இதுபோல் Meme Create செய்து உங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிடலாம். இது மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

  • Status Video Creation:

    இப்போதுள்ள மக்கள் அனைவரும் Whatsapp Status இல் வீடியோ பதிவிடுகிறார்கள்.நீங்கள் உங்கள் இன்ஸ்டாகிராம் பேஜ் இல் Status விடீயோக்களை Edit செய்து பதிவிட்டால் அது மூலம் அதிக Views -ஐ பெற்று பணம் சம்பாதிக்கலாம். இந்த வழிமுறைகளை பயன் படுத்தி நீங்களும் இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிக்கலாம். 

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement