World Asthma Day 2024
தினமும் நம் பதிவின் வாயிலாக ஒவ்வொரு நாளுக்கான சிறப்பு தினத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவின் வாயிலாக உலக ஆஸ்துமா தினம் எப்போது..? அது ஏன் கொண்டாடப்படுகிறது என்ற முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள போகின்றோம். ஆஸ்துமா என்றால் என்னவென்று நம் அனைவருக்குமே தெரியும். இன்றைய சூழலில் அது மிகவும் அரிதான நோயாக இருக்கிறது. ஆகவே இந்த பதிவின் வாயிலாக உலக ஆஸ்துமா தினத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
ஆஸ்துமா வராமல் தடுக்க யோகாசனம்
இன்று உலக ஆஸ்துமா தினம்:
ஆஸ்துமா என்ற நோயை பற்றி நாம் அனைவருமே அறிவோம். ஆகவே ஆஸ்துமா நோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமை அன்று “உலக ஆஸ்துமா தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது.
அதாவது இந்த 2024 ஆண்டு மே மாதத்தில் வரும் முதல் செவ்வாய்க் கிழமையான இன்று (07.05.2024) உலக ஆஸ்துமா தினமாக கொண்டப்படுகிறது.
உலக ஆஸ்துமா தினம் என்பது 1993 ஆம் ஆண்டு முதல் ஆஸ்துமாவுக்கான உலகளாவிய முன் முயற்சியால் உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் உலகளாவிய ஆஸ்துமா விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் உலகளவில் நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆஸ்துமா, வயது வரம்பின்றி அனைவருக்கும் ஏற்படும் வாழ்வியல் நோய் வகையைச் சார்ந்தது ஆகும். இந்நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது.
ஆஸ்துமா வருவதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா
உலக ஆஸ்துமா தினம் ஏன் கொண்டாடப்படுகிறது..?
ஆஸ்துமா என்பது உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியது போல், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி பாதிக்கும் ஒரு நீண்ட கால நோயாகும்.
ஆஸ்துமா, நுரையீரலில் உள்ள சிறிய காற்றுப்பாதையை சுற்றியுள்ள தசைகளில் வீக்கம் மற்றும் இறுக்கத்தை ஏற்படுத்துகிறது. இது குறுகிய காற்றுப் பாதைக்கு வழிவகுக்கிறது. மேலும், இதன் விளைவு காரணமாக ஆஸ்துமா உள்ள நபர்கள் இருமல், மூச்சுத்திணறல் மற்றும் மார்பில் இறுக்கத்தை அனுபவிப்பார்கள்.
அதுமட்டுமில்லாமல், உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே ஆஸ்துமா நோய் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் வரவேண்டும் என்பதற்காகவும், அனைவரும் அதன் தீவிரத்தை உணரவேண்டும் என்பதற்காகவும் தான் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் செவ்வாய் கிழமை உலக ஆஸ்துமா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆஸ்துமா தினத்தின் கருப்பொருள்: World Asthma Day Theme 2024
- இந்த 2024 ஆண்டின் கருப்பொருள் “ஆஸ்துமா கல்வி அதிகாரமளிக்கிறது”, (“Asthma Education Empowers”) ஆஸ்துமா உள்ளவர்களுக்கு அவர்களின் நிலையை சிறப்பாக நிர்வகிக்கவும், மருத்துவத் தலையீடு தேவைப்படும்போது அடையாளம் காணவும் கல்வி கற்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
- 2023 ஆம் ஆண்டுக்கான உலக ஆஸ்துமா தினத்தின் கருப்பொருள் “அனைவருக்கும் ஆஸ்துமா சிகிச்சை” (Asthma Care for All),
- 2022 ஆண்டின் கருப்பொருள், “ஆஸ்துமா கவனிப்பில் இடைவெளிகளை நீக்குதல்” (Closing Gaps in Asthma Care) மற்றும்
- 2019 தீம், “ஆஸ்துமாவை நிறுத்து” (STOP for Asthma) என்பதாகும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |