வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

டயாலிசிஸ் என்றால் என்ன.?

Updated On: January 26, 2024 8:05 PM
Follow Us:
What is Dialysis in Tamil
---Advertisement---
Advertisement

What is Dialysis in Tamil

இக்காலத்தில் நோய்களின் தாக்கம் அதிகரித்த கொண்டே இருக்கிறது. நமக்கு அறியாத பெயர்களில் எல்லாம் புது புது நோய்கள் கண்டறியப்படுகின்றன. நோய்களின் பெருக்கத்திற்கு ஏற்றவாறு மருந்துகளும் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவற்றை பற்றி நமக்கு முழுமையாக தெரியாது. அதாவது, பெயரினை மட்டுமே கேட்டிருப்போம். எனவே, அப்படி நாம் மருத்துவமனையில் டயாலிசிஸ் என்ற வார்த்தையை அறிந்திருப்போம். அதனை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

மனிதர்களுக்கு உடலில் ஏற்படும் நோய்களில் ஒன்று தான் சிறுநீரக செயலிழப்பு. இந்நோயால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சிறுநீரக செயலிழப்பு நோய்க்கு சிகிச்சை அளிக்க பல்வேறு மருந்துகள்  கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றுத்தான் Dialysis. எனவே, அதனை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

டயாலிசிஸ் என்றால் என்ன.?

டயாலிசிஸ் என்றால் என்ன

டயாலிசிஸ் என்பது சிறுநீரக செயலிழப்பின் இறுதி/கடைசி காலத்தில் தேவைப்படும் சிகிச்சை முறையாகும். சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால் சிறுநீரகம் வழக்கம்போல் செய்யும் வேலைகளை செய்வதில்லை. இதனால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதுபோன்று இருக்கும் பட்சத்தில் டயாலிசிஸ் முறை பயன்படுத்தப்பட்டு உடல் இயக்கங்களை சரியாக வேலை செய்ய வைக்கிறது.

டயாலிசிஸ் என்ன செய்கிறது.?

டயாலிசிஸ் உடலை சமநிலையில் வைக்கிறது.  அதாவது, உடலில் இருந்து நச்சுகள், கழிவுகள், உப்பு மற்றும் அதிகப்படியான தண்ணீரை நீக்குகிறது. மேலும்,  பொட்டாசியம், சோடியம் மற்றும் பைகார்பனேட் போன்ற சில இரசாயனங்களின் சமநிலையை பராமரிக்கிறது. அதுமட்டுமில்லாமல், டூப்களின் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.

ஆஞ்சியோ சிகிச்சை என்றால் என்ன

டயாலிசிஸ் வகைகள்:

டயாலிசிஸில் இரண்டு வகைகள் உள்ளது. ஒன்று ஹீமோடையாலிசிஸ் மற்றொன்று  பெரிட்டோனியல் டயாலிசிஸ் ஆகும்.

டயாலிசிஸ் மூலம் சிறுநீரக நோயை குணப்படுத்த முடியுமா.?

டயாலிசிஸ் என்பது செயலிழந்த சிறுநீரகத்தின் செயல்பாடுகளைச் செய்யும் ஒரு தற்காலிக சிகிச்சைமுறை/ஏற்பாடு மட்டுமே, ஆனால் அது சிறுநீரக நோய்களைக் குணப்படுத்தாது. ஒருவேளை நீங்கள் சிறுநீரக நோயை குணப்படுத்த விஐம்பினால் வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now