திராவிடம் என்றால் என்ன.?

Advertisement

திராவிடம் என்றால் என்ன.? | Dravidam Meaning in Tamil 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் திராவிடம் என்றால் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். திராவிடம் என்ற சொல்லினை கேட்டு இருக்காதவர்கள் என்றும் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு திராவிடம் என்ற சொல் பிரபலமானது. ஆனால், திராவிடம் என்றால் என்ன.? என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

எனவே நீங்கள் திராவிடம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஓகே வாருங்கள், திராவிடம் என்றால் என்ன.? என்பதை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம்.

Dravidam Meaning in Tamil:

திராவிடம் = திரவம் + இடம் 

 திரவம் + இடம் சேர்ந்தது தான் திராவிடம் ஆகும். இது மஹாராஷ்டிராவில் இருந்து தமிழ்நாடு வரை கடல் சூழ்ந்த பகுதியை குறிக்கிறது. அதாவது தமிழில் திரவம் சூழ்ந்த இடம் என்று பொருள்படும்.    திராவிடம்` என்பது உண்மையில் தமிழினைக் குறிக்கும் ஒரு திசைச் சொல்லாகும். அதாவது, திசையை குறிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு சொல் ஆகும். (தமிழ் குறித்த ஒரு திசைச் சொல்லே திராவிடமுமாகும்). 

இக்கால மொழியியலும், அரசியலும் பற்றி தமிழும், அதனின்று திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் ‘திராவிடம்’ என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே” என்று பாவாணர் குறிப்பிடுகிறார்.

 தமிழ் என்ற வார்த்தை தான் தமிழம் என்றும், த்ரமிள என்றும்,  திரமிட என்றும், திரவிட என்றும், த்ராவிட என்றும் இறுதியில் திராவிடம்’ என்றும் உச்சரிக்கப்பட்டது’ என்று பாவாணர் எழுதுயுள்ளார்.  

திராவிடம் என்ற சொல் ஆனது, தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கிறது. அதாவது,  திராவிடம் சொல், தமிழைக் குறிக்கும் சொல்லாக பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இவற்றின் சான்றுகள் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அத்திக்கும்பா கல்வெட்டில் காணப்படுகின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதில் த்மிர தேக சங்காத்தம்” (Dramira) என்ற சொல் பயன்படுத்தப்பட்டதாககவும், அது தமிழர் கூட்டணியை குறிக்கும் சொல் என்றும் கூறப்படுகிறது.

பண்டைய காலத்தில், பாண்டியர்கள் பல்லவர்கள், சோழர்கள் சாளுக்கியர்,இராஷ்டிரகூடர்கள் ஆண்ட பகுதி என்றும் கூறபடுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலியன திராவிடமொழிகள் ஆகும். திராவிட மொழிகளை பேசும் மக்களை திராவிட குடும்பம் என்று கூறுகிறார்கள். இவை தவிர வேறு சில மொழிகளும் உள்ளது. தமிழ் மட்டுமே பெருமளவுக்குத் திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது.

திராவிடம் என்பது தமிழர்களின் அடையாளமாகவும், அவர்களின் வரலாற்றுப் பெருமையைப் பிரதிபலிக்கும் சொல்லாகவும் இருந்து வருகிறது.

 பாவாணரின் ‘திராவிடத்தாய்’ என்ற நூலையும், அவருடைய ‘ஒப்பியன் மொழி நூல்’ என்ற நூலையும் படிப்பதன் மூலம் திராவிடம் பற்றி நன்கு அறிந்துகொள்ள முடியும்.  
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement