வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நன்னீர் என்றால் என்ன

Updated On: February 1, 2025 2:26 PM
Follow Us:
nanneer endral enna
---Advertisement---
Advertisement

Nanneer Endral Enna

இந்த உலகில் பிறந்த எல்லா உயிர்களும் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்றாக இருப்பது நீர் தான். உணவு இல்லாமல் கூட உயிர் வாழலாம். ஆனால் நீர் இல்லாமல் வாழ முடியாது. அந்த அளவிற்கு நீர் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த நீரை நாம் பல வழிகளில் பெற்று கொள்ளலாம். அதாவது பைப் மற்றும் ஆறு, ஏரி, குளம் போன்றவற்றின் மூலம் பெற்று கொள்ளலாம். இந்த நீரில் பல  வகைகள் இருக்கிறது. இந்த பதிவில் நன்னீர் என்றால் என்ன என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள போகின்றோம்.

நன்னீர் என்பதற்கான விளக்கம்:

நன்னீர் என்பது, உப்புக்களும், வேறு திண்மப் பொருட்களும் மிகவும் குறைந்த அளவில் கரைந்துள்ள நீர் ஆகும். இது ஒரு முக்கியமான மீளத்தக்க வளமாகும். அதாவது ஆயிரத்துக்கு, 0.5 பகுதி கரைந்த உப்புக்களைக் (புளோரைடு) கொண்டுள்ள நீரே நன்னீர் எனப்படும். இந்த நன்னீரானது உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாமல் மனிதர்கள் குடிப்பதற்கும்,. சமைப்பதற்கும் ஏற்ற நீராக இருக்கிறது. ஏரிகள், ஆறுகள், சில இடங்களிலுள்ள நிலத்தடி நீர் போன்றவற்றிலிருந்து நன்னீர் பெறப்படுகின்றது. நன்னீருக்கான மிக முக்கியமான மூலம் மழையாக இருக்கிறது.

ஆறுகள், நீர்த்தேக்கங்கள், மேகங்கள், பனிப்பாறைகள், எரிகள் போன்றவற்றில் நன்னீர் கிடைக்கும். உலகில் உள்ள அனைத்து நீரில் 2.5% மட்டுமே நன்னீர் ஆகும்.

உலகின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத இது, குடித்தல், வேளாண்மைக்கான நீர்ப்பாசனம் உட்படப் பல தேவைகளுக்கு மனிதர்களால் பயன்படுத்தப்படுகின்றது. இந்த உலகத்தில் உள்ள நீரானது மூன்று சதவீதம் நன்னீராக இருக்கிறது. நன்னீரின் 99 சதவீதம் உறைபனியாகவும், பனிக்கட்டியாகவும்  இருக்கிறது.

மக்கள் தொகை அதிகரித்து கொண்டே இருப்பதால் நீரின் தேவையும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. தண்ணீரானது குடிப்பதற்கு, விவசாயம் செய்வதற்கு இன்னும் பல பயன்பாட்டிற்கு உதவுகிறது.

நில மாசுபாடு மற்றும் காற்று மாசுபாடு நன்னீரை அதிகளவு பாதிப்படைய செய்கிறது. இந்த பூமியில் உள்ள நன்னீர்களுக்கு பிரச்சனையாக இருப்பது மனித கழிவுகள் மற்றும் தொழில்துறை கழிவுகள் தான் காரணமாக இருக்கின்றது.

நன்னீர் என்பது இயற்கை கொடுத்த வரமாக இருக்கிறது, இதனை பாதுகாப்பாக வைத்திருப்பது நாம் ஒவ்வொருவரின் கடமை என்பதை மனதில் வைத்து கொண்டு செயல்படுங்கள்.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now