ரெட் அலர்ட் என்றால் என்ன.?

Advertisement

What is a Red Rainfall Warning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ரெட் அலர்ட் என்றால் என்ன.? ( What is a Red Rainfall Warning in Tamil) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். மழைக்காலங்களில், இந்திய வானிலை ஆய்வுத்துறை பல்வேறு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடும். இந்த எச்சரிக்கைகள் அனைத்தும் ஒவ்வொரு நிறத்தில் இருக்கும். அதாவது, ஆரஞ்சு அலர்ட், மஞ்சள் அலர்ட் மற்றும் ரெட் அலர்ட் என இதுபோன்ற வண்ணங்களை குறிப்பிட்டு மழைக்கான எச்சரிக்கைகளை வானிலை மையம் வெளியிடும்.

இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது, அடைமழை மற்றும் பனிப்பொழிவு,  இடி மழை, திடீர் புயல் மற்றும் ஆலங்கட்டி மழை,  தூசிப்புயல் என்று மூன்று பிரிவுகளில் எச்சரிக்கைகள் அறிவிக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு நிறம் அடையாளமாக கூறப்படுகிறது. அவற்றில் ஓன்று தான் ரெட் (red alert in rain in tamil). எனவே, மழைக்காலங்களில் அறிவிக்கப்படும் ரெட் அலெர்ட்டிற்கு என்ன அர்த்தம் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.

மழைக்காலத்தில் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி?

ரெட் அலர்ட் என்றால் என்ன.? | What is Red Alert in Rain in Tamil:

ரெட் அலர்ட் என்றால் என்ன

ரெட் அலர்ட் என்பது, மிகமிக கனமழை என்று அர்த்தம் ஆகும். அதாவது, 24 மணிநேரத்திற்கு 204.5 மில்லி மீட்டர் அல்லது அதற்கு அதிகமான அளவில் கனமழை/பனிப்பொழிவு பெய்யும் என்பது ஆகும். இந்த சூழ்நிலை உருவாகும் நேரத்தில் தான் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுக்கிறது. இந்த கனமழையை Exceptionally Heavy Rainfall என்று குறிப்பிடுகிறார்கள்.

இம்மழையினால் மிகப்பெரிய கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்பதாகும். இதனால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், முன்கூட்டியே அதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்துக்கொள்ளவும் பாதுகாப்பாகவும் இருக்கவும் அறிவுறுத்துகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல், காற்றின் வேகம் மணிக்கு 62 முதல் 87 கிலோ மீட்டர் இருக்கும் எனவும், காற்று அல்லது புயலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் ரெட் அலர்ட் மூலம் அறிவிக்கப்படுகிறது.

மழைக்காலங்களில் Car பராமரிப்பது எப்படி ?

எனவே, ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தால் பொதுமக்கள், பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆபத்தான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற எச்சரிக்கைளின் போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுக்க வேண்டும். உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கேட்டு நடக்க வேண்டும். மெழுகுவர்த்தி, பால் மற்றும் உணவு பொருட்கள் போன்றவற்றை வாங்கி சேமித்து வைத்து கொள்ள வேண்டும் .

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement