404 Error பற்றி உங்களுக்கு தெரியுமா?

Advertisement

404 Error விவரங்கள் | 404 Error Meaning in Tamil

நாம் இணையதளத்தை பயன்படுத்தும் பொழுது நாம் இந்த 404 Error என்பதை பார்த்திருப்போம்.இந்த 404 Error என்றால் என்ன என்று நாம் அனைவருக்கும் பெரும்பாலும் தெரிந்திருக்காது.நாம் ஒரு இணையதளத்தில் ஒரு தகவலை தேடும் போது நமக்கு இந்த 404 Error வரும் இதை பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.

நமக்கு தேவையான தகவல்களை நாம் இணையத்தலிருந்தோ அல்லது கூகுள் இடமோ கேட்டு தெரிந்துகொள்கிறோம்.அப்படி நாம் ஒரு தகவலை தேடும் பொழுது நாம் இந்த 404 Error என்பதை பார்த்திருப்போம்.நாம் இணையதளத்தில் பெரும்பாலும் இந்த பிரச்னையை சந்தித்திருப்போம்.இது எதனால் Error வருகிறது என்று நமக்கு தெரிவதில்லை.அப்படி Error வரும் பொழுது நாம் சிறிது நேரம் கழித்து திரும்பி இணையதளத்தை ஓபன் செய்து பார்ப்போம்.

ரெட் அலர்ட் என்றால் என்ன.?

404 Error என்றால் என்ன?

நாம் இணையத்தில் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை பற்றி தேடும் பொழுது நாம் URL Link மூலியமாக தான் தேடுவோம்.அப்படி நாம் Link குடுத்து தேடும் பொழுது நமது இணைய உலாவிலிருந்து (Web Browser) சர்வர்க்கு(Server) ஒரு கோரிக்கை விடுக்கும். சர்வர்(Server) நம் கோரிக்கையை ஏற்று கொண்டால் மட்டும் தான் நாம் இணையதளத்தை பார்க்கமுடியம். இல்ல என்றால் சர்வர் டோவ்ன் (Server Down) என்று வரும்.

நாம் தேடும் தகவல்கள் இந்த சர்வரில் (Server) இருந்தால் மட்டும் தான் நாம் அந்த தகவல்களை பார்க்க முடியும்.அந்த தகவல்களை சர்வறிழுந்து அகற்றப்பட்டிருந்தாலோ அல்லது மாற்றியிருந்தாலோ நமக்கு இந்த 404 Error என்பது வரும்.404 Error Found என்பது நாம் ஒரு தவறான URL Link நாம் சர்வர் இடம் குடுக்கும் பொழுது நமக்கு இந்த 404 Error வரும்.நாம் தேடும் தகவலை வேறு URL லிங்கிற்கு அல்லது வேறு இடத்திற்கோ அல்லது வேறு அடைவிற்கோ(Directory) மாற்றியிருக்கலாம் அல்லது சர்வறிழுந்து அகற்றபடிருக்கலாம்.

சுருக்கமாக சொல்லணும் என்றால் நாம் இணையதளத்தில் தேடும் தகவலைகளை டெலீட் செய்திருந்தால் அல்லது வேறு URL க்கு மாற்றி இருந்தால் இந்த 404 Error  நமக்கு வரும்.இந்த 404 Error – ஐ  HTTP 404 Error  என்றும் கூறுவார்கள்.HTTP என்றால் Hypertext Transfer Protocol.இந்த Error பல்வேறு வழிகளாக Error காட்டும்.

HTTP 404 Error பல்வேறு வழிகளில் காட்டும்:

  • 404 பிழை (404 Error)
  • 404 கிடைக்கவில்லை (404 Not Found)
  • பிழை 404 (Error 404)
  • கோரப்பட்ட URL [URL] இந்த சர்வரில் இல்லை (The requested URL [URL] was not found on this server)
  • HTTP 404 (HTTP 404)
  • பிழை 404 கிடைக்கவில்லை (Error 404 Not Found)
  • 404 கோப்பு அல்லது அடைவு கிடைக்கவில்லை (404 File or Directory Not Found)
  • HTTP 404 கிடைக்கவில்லை (HTTP 404 Not Found)
  • 404 பக்கம் கிடைக்கவில்லை (404 Page Not Found)
  • பிழை 404. நீங்கள் தேடும் பக்கம் கிடைக்கவில்லை (Error 404. The page you’re looking for can’t be found)

404 Error  காண காரணம்:

  • இணையப் பக்கம் அகற்றப்பட்டிருக்கலாம் அல்லது மாற்றியிருக்கலாம்
  • தவறாக உள்ளிடப்பட்ட URL
  • உடைந்த இணைப்புகள்(Broken Links)
  • டிஎன்எஸ் அமைப்பில் பிழை
  • உலாவி கேச்சிங்(Browser Caching)
  • விடுபட்ட குறியீடுகள் மற்றும் மல்டிமீடியா

404 Error -ஐ தடுப்பது எப்படி?

  • இணையதளத்தின் URL Link – ஐ  சரிபார்த்து கொள்ளவும்.
  • உங்கள் மொபைலில் மட்டும் Error வருது என்றால் உங்களுடைய Catch Memories மற்றும் Cookies – ஐ  டெலீட் செய்யுங்கள்.

டாடா நிறுவனத்தின் சொத்து மதிப்பு பற்றி தெரியுமா?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement