வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

AI-யிடம் இதெல்லாம் தெரியாம சொல்லிட்டேனே.! முன்னடியே சொல்ல மாட்டிங்களா.!

Updated On: January 3, 2025 6:34 PM
Follow Us:
5 things you should never share ai
---Advertisement---
Advertisement

5 things you should never share ai

தொழில்நுட்பம் வளர்வதை கண்டு சந்தோசப்படுவதா, கவலை அடைவதா என்று தெரியவில்லை. ஏனென்றால் அவற்றில் நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் இருக்கிறது. மனிதர்களுக்கு வேலைகள் குறைவதும், மோசடிகள் நிறைய நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் மனிதன் மூளையை பயன்படுத்தாமல் எதற்கெடுத்தாலும் AI  நாடுகின்றான். இந்த AI-யை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பயன்படுத்துகிறார்கள். இதில் சில விஷயங்கள் பகிர கூடாது என்று கூறப்படுகிறது. அவை என்னென்ன என்று இந்த பதிவை பார்த்து அறிந்து கொள்வோம் வாங்க.

Personal Information:

எந்த ஒரு  சாட்பாட்டிடம் தகவல்களை கேட்கும் போது ,உங்களுடைய  பெயர், முகவரி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைக் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. ஏனெனில் இவற்றையெல்லாம் கொடுக்கும்போது ஏதேனும் ஒரு வழியில் அவரது அடையாளம் பின் தொடரப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

Financial Information:

ஏஐ-யிடம் உங்களுடைய  வங்கிக் கணக்கு எண், கிரெடிட் கார்டு எண், ஆதார் எண் போன்றவற்றை பதிவிட கூடாது. மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று தகவல் கேட்கும் போது  போலியான எண்களைப் பதிவிட வேண்டும்.

நாம் பேசும் கால்களில் கூட மோசடி நடக்கிறதா?

Password:

5 things you should never share ai tamil

நீங்கள் எதற்காகவாது paasword போட வேண்டுமெமென்றால் எந்த AI-யிடம் சென்று என்ன Password வைப்பது என்று ஆலோசனை கேட்க கூடாது.

தொழில் ரீதியான ரகசியங்கள்:

உங்களில் தொழில் ரகசியங்கள், கஸ்டமரின் விவரம், சொத்து விவரம் போன்றவற்றை AI-யிடம் பதிவிட கூடாது.

மேலும் ஒருவருக்கு மட்டுமே தெரிந்த எந்த விஷயத்தையும் AI-யிடம் பகிர கூடாது. மனிதனிடம் பகிர்ந்தால் கூட எப்போதுவது மறந்து விடுவான், ஆனால் AI ஆனது தகவல்களை சேமித்து வைத்து கொள்ளும்.

Medical Or Health Data:

உடல்நல விவரங்களை ஒருபோதும் AI-யிடம் பகிர வேண்டாம். அதில் காப்பீட்டு எண், உடல்நல விவரங்கள் போன்றவற்றை பதிவிட வேண்டாம்.

நாம் சொல்வது, கேட்பது என அனைத்தும் AI  செயலியில் சேமிக்கப்படலாம். அதன் மூலம் அதன் தரத்தைக் கூட்டுவதற்கு என்று கூறப்படலாம். எனவே, நாம் சொல்வது கேட்பது சேமிக்கப்படத்தக்கது நல்லதல்ல என்று கருதினால் அதை கேட்காமல், சொல்லாமல் தவிர்ப்பதே ஆரோக்கியமான செயலாக இருக்கிறது.

தொழில்நுட்பத்தை சிறப்பாக கையாள வேண்டும். எதிர்வரும் மோசடி அபாயங்கள் மற்றும் ஆபத்திலிருந்து நம்மை காத்துக் கொள்ள ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு முன் எப்படி கையாள வேண்டும் என்பதில் நிபுணத்துவம் பெற்று கையாண்டாலேயே பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now