வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அமில மழை என்றால் என்ன

Updated On: April 21, 2025 3:45 PM
Follow Us:
amila malai enral enna
---Advertisement---
Advertisement

அமில மழை என்றால் என்ன.?

நாம் பள்ளி பருவத்தில், கல்லூரி பருவத்தில் நிறைய விஷயங்களை கற்று கொள்வதற்கான ஆர்வம் அதிகமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் நாம் வீட்டில் இல்லாமல்  வெளியில் செல்வதால் பல விஷயங்களை கற்று கொள்வதற்கான ஆர்வம் அதிகமாக இருக்கும். நாம் எதை சேர்த்தாலும் அழிந்து விடும்.ஆனால் கல்வி என்ற செல்வத்தை கற்று கொண்டால் யாராலும் அதனை எடுக்க முடியாது. நீங்கள் கற்று கொள்வதோடு மட்டுமில்லாமல் அதனை மற்றவர்களுக்கும் அதனை சொல்லி கொடுங்கள். நீங்கள் புத்தி புதிதான விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் என்று நினைத்துள்ளீர்கள் என்றால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க இந்த பதிவில் அமில மழை என்றால் என்ன? என்று அறிந்து கொள்வோம் வாங்க..

அமில மழை என்றால் என்ன.?

வளிமண்டலத்தில் உள்ள காற்றை மாசுபடுத்த கூடிய முக்கிய கூறுகளான கார்பன்டை-ஆக்சைட் (Carbon-di-Oxide) மற்றும் நைட்ரஜன் ஆக்சைட் (Nitrogen Oxide) இரண்டும் காற்றில் கலப்பதால் ஏற்படும் விளைவு தான் இந்த அமில மழை,  இந்த அமிலங்கள் மழை, பனிக்கட்டி அல்லது பனியாக பூமிக்கு விழும்போது அதனை அமில மழை என்று அழைக்கப்படுகிறது. இதனை எப்படி அமில தன்மை கொண்ட மழை என்று கூறுகிறார்கள் என்றால், நாம் எந்த ஒரு திரவத்தையும் அதில் அமில தன்மை உள்ளதா என்று பார்ப்பதற்கு pH அளவு எடுத்து பாப்போம் அதில் pH அளவு 7 க்கும் கம்மியாக இருந்தால் அது அமிலத்தன்மை உடையது என்று அர்த்தம். ஒரு வேளை 7 ஐ தாண்டி உள்ளது என்றால் கார தன்மை உடையதாகும். நமக்கு சாதாரணமாக பெய்ய கூடிய மழையில் அமில தன்மை மிகவும் குறைவாகவே இருக்கும். அதவாது, நமக்கு பெய்யும் தூய்மையான மழையின் pH அளவு 5.6 ஆகும். அதனால் பெய்யும் தூய்மையான மழையில் சிறுது அளவு அமில தன்மை என்பது இருக்கும். அதற்கு காரணம் வளிமண்டலத்தில் அமிலம் என்பது கலந்திருக்கும்.

அமில மழை பெய்வதற்கு காரணம் என்ன.?

அமில மழை பெய்வதற்கு காரணமாக இருப்பது எரிமலை வெடிப்பு தான். எரிமலை வெடிப்பில் உண்டாகக்கூடிய சல்ஃப்யூரிக் அமிலம் தான். இந்த சல்ஃப்யூரிக் அமிலம் காற்றில் கலப்பதால் காற்று மாசுப்பட்டு இந்த அமில மழை என்பது பெய்கிறது. இந்த சல்ஃப்யூரிக் அமிலம் ஆக்ஸிஜன், நீர் மற்றும் பிற இரசாயனங்களுடன் வினைபுரிந்து நைட்ரஜன் ஆக்சைட் மற்றும் சல்பூரிக் அமிலங்களை உருவாக்குகின்றன அது மழையாக மாறி பெய்கிறது.

அமில மழைக்கு காரணமான வாயுக்கள் நைட்ரஜன் ஆக்சைடுகள் (Nitrogen Oxides) மற்றும் சல்பர் ஆக்சைடுகள் (Sulfur Oxides) ஆகும்.

அமில மழை என்றால் என்ன அதன் விளைவு யாது:

அமில மழை என்றால் என்ன

நீர்வாழ் உயிரினங்கள்:

அமில மழை பெய்வதால் ph அளவானது குறையும். இதனை நீர்வாழ் உயிரினங்களின் வாழ்க்கையை பாதிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. ph அளவானது 5-க்கு கீழே இருந்தால் சில வகையான மீன்கள் ஆனது முட்டையும் பொரிக்காது. அதுமட்டுமில்லாமல் சில வகையான மீன்கள் இறக்கவும் நேரிடும். இந்த பாதிக்கப்பட்ட மீன்களை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மண்:

அமில மழையால் மண்ணின் சிறப்பு தன்மை குறைந்து விடும். அமில மழையானது மண்ணில் அலுமினியம் போன்ற விஷ அயன்களின் அதிகரித்து, தாவரங்களுக்கு தேவையான சத்துக்களை கொடுக்க முடியாமல் போகிவிடுகிறது. இதனால் விவசாயம் மற்றும் மண்ணின் வளத்தையும் பாதிக்க செய்கிறது.

கட்டிடங்கள்:

அமில மழையால் சில வகையான கட்டிடங்கள் மற்றும் சிலைகள் மேல் விழுகிறது. இதன் மூலம் சிலைகள் அல்லது சில கட்டிடங்கள் உடைந்து விடுகிறது.

மேலும் இது போன்ற Information செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Information

 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now