போன் வாங்கும் போது இதை பார்த்து வாங்குங்க..

Advertisement

 

Android phone sar value check in tamil

இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஒரு வீட்டில் 5 பேர் இருந்தாலும் 5 பேரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறார்கள். சில பேர் கொஞ்ச நாள் பயன்படுத்திய பிறகு வேறு ஏதும் மாடல் ஏதும் வந்திருந்தால் அதனை வாங்குவார்கள். சில பேர் எத்தனை வருடமானாலும் அதே போனை தான் பயன்படுத்துவார்கள். இது போல நீண்ட வருடம் பயன்படுத்த கூடாதாம்.! அவை எதனால் என்று அறிந்து கொள்ளலாம் வாங்க..

SAR மதிப்பு தீமைகள்:

பலரும் பிடித்த போனாக இருந்தால் எத்தனை வருடமென்றாலும் பயன்படுத்துவார்கள், அதில் ஏதும் பிரச்சனைகல் வந்தாலும் அதனை சரி செய்து விட்டு பயன்படுத்துவார்கள். காரணம் அவர்கள் முதலில் வாங்கிய போனாக இருக்கலாம், அல்லது முதல் மாத சம்பளத்தில் வாங்கிய போனாக இருந்தால் அதனை மாற்ற மாட்டார்கள். ராசியான போன் என்று வைத்து கொள்வார்கள்.

ஸ்மார்ட்போனுடன் அதிக நேரத்தை செலவிடும் நமக்கு, அதன் மூலம் எழும் கதிர்வீச்சின் அளவு பற்றி அறிந்துகொள்வதும் முக்கியமானது. ஏன் ஒரு ஸ்மார்ட்போனில் இருந்து எழும் கதிர்வீச்சின் அளவை நாம் அறிந்திருக்கவேண்டும். காரணம் இருக்கிறது. அதிகப்படியான கதிர்வீச்சு உங்கள் உடல் ஆரோக்கியத்திற்குத் பிரச்சனையை ஏற்படுத்தும்.

அதாவது இதய பிரச்சனை அல்லது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் சரும பிரச்சனை, புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் போனில் இந்த மதிப்பை பார்த்து வாங்க வேண்டும். அது என்னவென்று அறிந்து கொள்வோம் வாங்க..

எப்படி கண்டுபிடிப்பது:

how to check phone sar value

SAR என்பது Specific Absorption Rate என்பது விரிவாக்கமாக இருக்கிறது,

உங்களுடைய போனில் *#07# என்பதை Dial செய்ய வேண்டும், பிறகு Sar மதிப்பு வரும், இந்த மதிப்பானது 1.6 W/kg தான்  இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால் அந்த போனை வாங்காதீர்கள். இந்த அளவிற்கு குறைவாக இருந்தால் தான் ஆரோக்கியத்திற்கு நல்லது.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement