வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த நேரத்தில் தங்கத்தை வாங்குங்கள்.! தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும்..

Updated On: April 9, 2025 3:13 PM
Follow Us:
akshaya tritiya 2025 date and time in tamil
---Advertisement---
Advertisement

Atchaya Thiruthiyai 2025 in Tamil | Akshayathirithiyai 2025 in Tamil Calendar

அட்சய திருதியை என்பது ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் வரக்கூடியது. அதுவும் அமாவாசைக்கு பிறகு 3 நாள் வரக்கூடிய திருதியை தான் அட்சய திருதி. இந்த நாளில் பல சுப காரியங்கள் செய்யலாம். அதாவது தானம் செய்வது, தங்கம் வாங்குவது வீடு குடி புகுதல் போன்ற காரியங்களை செய்யலாம். இந்த நாள் எப்போது வருகிறது, அதற்கான நேரம் என்னவென்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

அட்சய திருதியை எப்போது:

அட்சய திருதியை எப்போது

இந்த வருடம் அட்சய திருதியை ஆனது ஏப்ரல் 29-ம் தேதி மாலை 05.31 PM மணி ஆரம்பித்து என்பரால் 30-ம் தேதி மதியம் 02.12 PM மணிக்கு முடிவடைகிறது. எப்போ வழிபாடு செய்யலாம் என்றால் ஏப்ரல் 30-ம் தேதி காலை 5.41 மணி முதல் 12.18 மணி வரை பூஜை செய்யலாம். இந்த நேரத்தில் வழிபாடு செய்வதன் மூலம் செய்யும் வேலை ஆனது செழிப்பையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.

தங்கம் வாங்குவது இந்துக்களுக்கு அதிர்ஷ்டமும், செல்வாக்கையும் கொடுக்கிறது. அது போல தங்கம் நல்ல முதலீடாகவும் இருக்கிறது. இதனால் தங்கம் சேர்ப்பதற்கு ஆவலாக இருக்கிறார்கள்.

இந்த நாளில் லட்சுமி தேவியையும், விஸ்ணு பகவானையும் வழிபட்டால் மகிழ்ச்சி பெருகும். இந்த நாளில் தங்கம் வாங்கினால் பெருகி கொண்டே போகும். தங்கம் வாங்க முடியவில்லை என்றால் வெள்ளி கூட வாங்கலாம்.

தங்கம் வாங்க உகந்த நேரம் | Akshaya Tritiya 2025 Date and Time

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் தங்கம் பெருகி கொண்டே இருக்கும் என்பது ஐதீகமாக இருக்கிறது. அந்த வகையில் எப்போது வாங்கலாம் என்று அறிந்து கொள்வோம் வாங்க.. ஏப்ரல் 30-ம் தேதி காலை 05.41 AM முதல் மதியம் 02.12 PM தங்கம் வாங்க உகந்த நாளாக இருக்கிறது. அதே போல 29-ம் தேதி மாலையே திருதியை வருவதால் அன்றைய தினமும் தினமும் வாங்கி கொள்ளலாம்.

மரபுகள்:

அட்சய திருதியை எப்போது

அட்சய திருதியை அன்று மக்கள் கோவில்களில் பூஜை செய்து தானம் மற்றும் தங்கம் வாங்குவடகு போன்ற செயல்களை செய்கிறார்கள். இது போல செய்வதினால் செல்வ நிலையானது உயரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது ஆன்மீக மற்றும் நிதி சேர்க்கையை குறிக்கிறது. இந்த நாளில் செய்யப்படும் முதலீடுகள் நிலையான மற்றும் செல்வத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி தங்கம் வாங்குவதால் குடும்பத்தின் செல்வாக்கும், சமூக அந்தஸ்தும் அதிகரிக்கிறது. இந்த கலாச்சார பாரம்பரியத்தின் மூலம் செல்வமும் ஆன்மீகமும் உயர்கிறது.

அட்சய திருதியை அன்று 2024-ல் எவ்வளவு வியாபாரம்:

கடந்த 2024-ம் ஆண்டு அட்சய திருதியை நாளில் தமிழகத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தங்கம் விற்பனை நடந்தது. 2023-ம் ஆண்டு 11 ஆயிரம் கோடி ரூபாய் விற்பனை நடந்து. ஆனால் அதை விட 2024-ம் ஆண்டு அதிகமாக நடந்தது.

மேலும் இது போன்ற Information செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Information

 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை