Axe oil Ingredients in Tamil
வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். நாம் அனைவருமே கோடாரி தைலம் என்று சொல்லக்கூடிய Axe oil பயன்படுத்தி வருவோம். தலைவலி என்றால் அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருள் கோடாரி தைலம். அதுமட்டுமில்லாமல், வெளிநாட்டில் இருப்பவர்களிடம் ஒவ்வொரு குடும்பமும் மறக்காமல் வாங்கி வர சொல்லும் ஒரு பொருள் இந்த கோடாரி தைலம் தான். பெரும்பாலும் இந்த தைலத்தை தண்ணி தைலம் என்று கூறுவார்கள். மற்ற தைலங்களை போலல்லாமல் திரவ நிலையில் இருப்பதால் தண்ணி தைலம் என்று கூறுவார்கள். கோடாரி தைலம் பெரும்பாலானவர்களின் விருப்பமாக இருக்கிறது. எல்லோரிடம் Axe oil இருந்தவண்ணம் இருக்கும். அப்படி பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் இந்த Axe oil -லில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரியுமா.? தெரியவில்லை என்றால் வாருங்கள் அதனை பற்றி பின்வருமாறு விவரமாக தெரிந்து கொள்ளலாம்.
Axe oil என்பது மிகப்பெரிய பிரபலமான தைலத்தில் ஒன்றாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரை கேட்டாலும் இந்த தைலத்தை பெயரினை கூறுவார்கள். அந்த அளவிற்கு பிரபலமான ஒன்று. சரி வாருங்கள், Axe Medicated Oil Ingredients in Tamil பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Axe Medicated Oil Ingredients in English:
- Menthol
- Methyl salicylate
- Camphor
- Eucalyptus oil
- Lavender oil
- Mineral oil
Axe oil Ingredients in Tamil:
- பச்சைக்கற்பூரம்
- மெத்தில் சல்பைலட்
- கற்பூரம்
- யூகலிப்டஸ் எண்ணெய்
- லாவெண்டர் எண்ணெய்
- மினரல் ஆயில்
திரிபலா சூரணம் பொடியில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்
Axe Oil Uses in Tamil:
கோடாரி தைலம் பின்வரும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு மருந்தாக காலம் காலமாக பயன்டுத்தப்பட்டு வருகிறது.
- தலைவலி
- மயக்கம்
- பூச்சிக்கடி
- மூக்கடைப்பு
- வயிற்று வலி
- ஜலதோசம்
- வாத சம்பந்தமான வலிகள்
- தசை பிடிப்பு
பயன்படுத்தும் முறை:
- Axe Oil -லினை வலி உள்ள இடத்தில் சில துளிகள் இட்டு நன்கு தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் வலி குறையும்.
- மூக்கடைப்பு ஏற்பட்டால் கைகுடைகளில் Axe Oil -லினை ஒரு சில துளிகள் இட்டு நுகர்வதன் மூலம் மூக்கடைப்பு நீங்கும்.
கோபால் பல்பொடியில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |