சபரிமலை ஐயப்பன் கோவில் ஆன்லைன் புக்கிங் | Ayyappan Temple Online Booking
சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு வணக்கம்..! கார்த்திகை மாதம் ஐயப்பன் பக்தர்கள் அனைவரும் 48 நாட்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை வழிபடுவார்கள்.ஐயப்பன் கோவிலுக்கு 48 நாட்கள் முடிந்த பிறகு செல்வார்கள்.ஐயப்பன் கோவிலுக்கு புக்கிங் செய்து தான் சுவாமியை வழிபட முடியும். கோவிலுக்கு ஆன்லைன் புக்கிங் எப்படி செய்வது என்பது நம்மில் பல பேருக்கு தெரியவில்லை.நீங்களும் ஐயப்பன் பக்தரா இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சபரிமலை பக்தர்களாகிய நீங்கள் எப்படி பூக்கிங் செய்வது என்று தெரியவில்லையா? இந்த பதிவை முழுமையாக பார்த்து கோவிலுக்கு புக்கிங் செய்து ஐயப்பனை வழிபடுங்கள்.சபரிமலை ஐயப்பன் கோவில் அதிகாரபூர்வ இணையதளமான www.sabarimalaonline.org என்ற இணையத்தளம் செல்லவும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஏன் 18 படிகள் உள்ளது.?
ஐயப்பன் கோவில் ஆன்லைன் புக்கிங்:
சபரிமலை ஐயப்பன் கோவில் அதிகாரபூர்வ இணையதளமான www.sabarimalaonline.org என்ற இணையத்தளம் செல்லவும்.
மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும், டிக்கெட் புக்கிங் செய்வதற்கு ஏற்கனவே புக்கிங் செய்தவர்கள் என்றால் உங்களுடைய Id, Password – ஐ login செய்து டிக்கெட் புக்கிங் செய்து கொள்ளலாம்.நீங்கள் முதல் தடவை புக்கிங் செய்பவர்கள் என்றால் New User Register என்பதை Click செய்து புதிதாக register செய்ய வேண்டும்.
New User Register என்பதை click செய்து உள்நுழையவும் அதில் கேட்க பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்யவும்.
புதிதாக புக்கிங் செய்பவர்கள்:
- Photo
- Name
- Mobile No
- Date Of Birth
- Id Proof (Aadhaar Card, Voter Id, Passport)
- Password புதிதாக Create செய்யவும்
- இந்த தகவல்களை குடுத்த பிறகு உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP (One Time Password) செய்தியாக (Message) வரும்.OTP – ஐ குடுத்து Submit செய்ய வேண்டும்.
- நீங்கள் Create செய்த Password – ஐ பத்திரமாக வைத்து கொள்ளவும்,நீங்கள் எப்போது டிக்கெட் புக்கிங் செய்தாலும் உங்களுடைய மொபைல் எண் மற்றும் இந்த Password -ஐ வைத்து தான் Log In செய்ய வேண்டும்.
புதிதாக புக்கிங் செய்பவர்கள் உங்கள் பதிவை முடித்த பிறகு,நீங்கள் Create செய்த Password மற்றும் உங்கள் மொபைல் எண்ணை குடுத்து Log In செய்யவும்.
டிக்கெட் புக்கிங் செய்யும் முறை:
சபரிமலை ஐயப்பன் கோவில் அதிகாரபூர்வ இணையதளமான www.sabarimalaonline.org என்ற இணையத்தளம் செல்லவும்.
- Virtual-Q என்பதை Click செய்து உள்நுழையவும்.
- Select Date – நீங்கள் ஐயப்பன் ஸ்வாமியை தரிசிக்கும் தேதியை தேர்வு செய்ய வேண்டும்.நீங்கள் தரிசிக்கும் தேதியை சரியாக தேர்வு செய்ய வேண்டும்.
- Select Route – நீங்கள் போகும் வழியை தேர்வு செய்ய வேண்டும்.பம்பா அல்லது வண்டிப்பெரியார் அல்லது எரிமேளே இதில் எதைவேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.பெரும்பாலான ஐயப்பன் பக்தர்கள் பம்பாவிலிருந்துதான் ஐயப்பனை தரிசிக்க செல்வார்கள்.
- Timing Slot – நீங்கள் ஐயப்பன் ஸ்வாமியை தரிசிக்கும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். அதிகாலை 3 மணியிலிருந்து இரவு 11 மணி வரை ஐயப்பனை தரிசிக்கலாம்.உங்களுக்கு வசதியான நேரத்தை தேர்வு செய்து கொள்ளவும்.
- Self – நீங்கள் Self – ஐ Click செய்தால் நீங்கள் மட்டும் ஐயப்பனை தரிசிப்பீர்கள்.
- Others – நீங்கள் Others – ஐ Click செய்தால் உங்களுடன் அதிகபட்சம் 5 பேர் வரை ஐயப்பனை தரிசிக்கலாம்.
- Add Pilgrim – நீங்கள் 5 பேர்களாக செல்கிறீர்கள் என்றால் Add Pilgrim – ஐ Click செய்து உங்களுடன் வரும் நபர்களுடைய தகவல்களை குடுத்து Add -ஐ Click செய்து டிக்கெட் புக்கிங் செய்து கொள்ளலாம்.
- ஒவ்வொரு தடவையும் Add Pilgrim என்பதை தேர்வு செய்து உங்களுடன் வரும் நபர்களுக்கும் டிக்கெட் புக்கிங் செய்து கொள்ளவும்.5 பேர்கள் வரை நீங்கள் Add செய்து கொள்ளலாம்.
- Select Pilgrim – Select Pilgrim – ஐ Click செய்து உங்கள் பேர்களை தேர்வு செய்ய வேண்டும்.தேர்வு செய்த பிறகு Submit குடுக்க வேண்டும்.
- Add to Wishlist – Add To Wishlist – ஐ click செய்து உங்கள் தகவல்களை சரிபார்க்கவும் பின்னர் Proceed – ஐ Click செய்து Ok குடுக்கவும்.
- உங்கள் டிக்கெட்டை Download – ஐ click செய்து download செய்து பத்திரமாக வைத்து கொள்ளவும்.
ஐயப்பனை தரிசிக்க தகுதியானவர்கள்:
- பெண்கள் 10 வயதிற்குள் இருக்கும் பிள்ளைகள் மற்றும் 50 வயதிற்கு மேல் இருக்கும் பெண்கள் தரிசிக்கலாம்.
- 5 வயதிற்குள் இருக்கும் குழந்தைக்கு டிக்கெட் தேவையில்லை.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு 2024
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |