உணவிற்கு சிறந்த நேரம் எதுவென்று தெரியுமா.?

Advertisement

உணவிற்கு சிறந்த நேரம் 

நம்முடைய முன்னோர்களின் காலத்தில் வேலைக்கு தகுந்தது போல உணவுகளை சரியான நேரத்தில் எடுத்து கொண்டார்கள். ஆனால் இன்றைய காலத்தில் யாரும் உணவுகளை சரியாக எடுத்து கொள்வதில்லை. ஆரோக்கியமான உணவுகளையும்  எடுத்து கொள்வதில்லை. இதனால் உடலில் பல ஆரோக்கியமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அனைவரும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொண்டு நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. சில பேர் கண்ட நேரத்தில் சாப்பிடுவார்கள். அப்படியும் சாப்பிட கூடாது. உணவு சாப்பிடுவதற்கென்று நேரம் இருக்கிறது. அதனை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்ள போகின்றோம்.

காலை உணவு நேரம்:

காலை உணவு என்பது முக்கியமானது, அதனை எக்காரணத்தை கொண்டும் தவிர்க்க கூடாது. நாம் காலை உணவு சாப்பிடுவதன் மூலம் தான் நம்முடைய உடலானது சுறுசுறுப்புடன் இருக்கும். இந்த காலை உணவிற்கு சிறந்த உணவு எதுவென்று அறிந்து கொள்வோம் வாங்க.

காலை உணவு 7 மணி முதல் 8 மணிக்குள்சாப்பிட வேண்டும். என்னால் இந்த நேரத்திற்குள் சாப்பிட முடியாது. நான் லேட்டா தான் சாப்பிடுவேன் என்று சில பேர் கூறுவார்கள். அவர்கள் எல்லாம் காலை 10 மணியை தாண்ட கூடாது.

மதிய உணவு நேரம்:

நீங்கள் மதிய உணவு 12.30 மணி முதல் 2 மணிக்குள் சாப்பிட வேண்டும். சில பேர் 2.30 மணிக்கு தான் சாப்பிடுவார்கள். ஆனால் நினைவில் வைத்து கொள்ளுங்கள் மாலை 4 மணியை தாண்ட கூடாது.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் 4 மணி நேரம் தான் இடைவெளி இருக்க வேண்டும். அதற்கும் அதிகமாக இருக்க கூடாது.

இரவு உணவு நேரம்:

இரவு உணவை பலரும் சாப்பிட மாட்டார்கள். அதற்கு பதிலாக ஜூஸ் அல்லது பால், வாழைப்பழம் சாப்பிடுவார்கள். இரவு உணவை எக்காரணத்தை கொண்டும் தவிர்க்க கூடாது.

நீங்கள் இரவு உணவை மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் எடுத்து கொள்ள வேண்டும். மேலும் 10 மணிக்கு பிறகு எடுத்து கொள்ள கூடாது. நீங்கள் ஞாபகம் வைத்து கொள்ளுங்கள், இரவு உணவை தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னே சாப்பிட வேண்டும். அப்போது தான் உணவானது சீக்கிரம் செரிமானம் ஆகும்.

மேல் கூறியுள்ள உணவின் நேரம் படி எடுத்து கொள்ள முயலுங்கள். உங்களது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement