இரத்த தானம் செய்வதற்கு தகுதிகள்

Advertisement

யார் இரத்த தானம் செய்யலாம்

இன்றைய காலத்தில் நோய்கள் என்பது சொல்லி கொண்டு வருவதில்லை, எப்படியெல்லாமோ நோய்கள் வருகின்றது. அப்படி உடலில் ஏதும் பிரச்சனை என்றால் பார்த்து விட்டு அதனை சரி செய்வதற்கு முன்னால் இரத்த டெஸ்ட் எடுப்பார்கள். அதில் இரத்த குறைவாக இருக்கிறது என்று கூறுவார்கள். அந்நேரத்தில்நாம் இரத்தத்தை ஏற்றிய பிறகு தான் இரத்த நோய்களை சரி செய்ய முடியும்.

அப்படி இருக்கையில் இந்த இரத்தத்தை பலரும் தானம் செய்திருப்பார்கள். சில பேருக்கு இரத்த தானம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்,ஆனால் அதற்கான தகுதிகள் என்னவென்று யாருக்கும் தெரியாது. அதனால் தான் இந்த பதிவில் இரத்த தானம் செய்வதற்கான தகுதிகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

இரத்த தானம் செய்ய தகுதிஅளவுகோல்:

  1. வயது 18 முதல் 60 வயது வரை இருப்பவராக இருக்க வேண்டும்.
  2. ஹீமோகுளோபின் – 12.5 g/Dl க்கும் குறையாமல் இருக்க வேண்டும்.
  3. இதய துடிப்பு – 50 மற்றும் 100/நிமிடத்திற்கு இடையில் எந்த முறைகேடும் இல்லாமல் இருக்க வேண்டும்.
  4. இரத்த அழுத்தம் – சிஸ்டாலிக் 100-180 மிமீ எச்ஜி மற்றும் டயஸ்டாலிக் 50 – 100 மிமீ எச்ஜி
  5. உடல் எடை- உடல் எடையானது 45 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
  6. ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறையும் பெண்கள் 4 மாதங்களுக்கு ஒருமுறையும் ரத்தத் தானம் செய்யலாம்.
  7. உடலின் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இரத்த வகைகள் எத்தனை

மருத்துவ அளவுகோல்:

  • கடந்த ஆறு மாதங்களாக பச்சை குத்திருக்க கூடாது, காது குத்திருக்க கூடாது, இரத்தம் அல்லது இரத்தப் பொருட்கள் பெறப்படவில்லை, தீவிர நோய் அல்லது  அறுவை சிகிச்சை ஏதும் செய்திருக்க கூடாது. ஹெபடைடிஸ் அல்லது மஞ்சள் காமாலை பிரச்சனையில் இருந்திருக்க கூடாது.
  • கடந்த மூன்று மாதங்களாக – இரத்த தானம் செய்திருக்க கூடாது, மற்றும்  மலேரியாநோய்க்காக சிகிச்சை செய்திருக்க கூடாது.
  • கடந்த இரு மாதமாக நோய்தடுப்பு மருந்து ஏதும் எடுத்திருக்க கூடாது.
  • கடந்த 48 மணி நேரத்தில் எந்த விதமான மருந்துகளையும் எடுத்திருக்க கூடாது.
  • இரத்த தானம் செய்வதற்கு 24 மனை நேரத்திற்கு முன் மது அருந்திருக்க கூடாது.

யார் யார் ரத்த தானம் செய்ய முடியாது:

  • டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல் வந்தவர்கள், சிகிச்சை பெற்று ஆறு மாதங்கள் வரை ரத்தத் தானம் செய்யக் கூடாது.
  • பெண்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தாலோ இரத்த தானம் செய்ய கூடாது.
  • பெண்கள் மாதவிடாய் நேரத்தில் இரத்த தானம் செய்ய கூடாது.
  • எச்.ஐ.வி., மஞ்சள் காமாலை தொற்றுள்ளவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.
  • இதயநோய், காசநோய், வலிப்புநோய் உடையவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோயாளிகள் எப்போதும் ரத்ததானம் செய்யக்கூடாது.

உங்களுக்கு Blood Donor உடனே கிடைக்க வேண்டுமா.? அப்போ இதை மட்டும் பண்ணுங்க..!

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link

 

Advertisement