பால் ஆதார் கார்ட் என்றால் என்ன? Blue Aadhaar for Child
பொதுவாக அனைவருக்கும் ஆதார் கார்ட் பற்றி தெரிந்திருக்கும், ஆனால் பெரும்பாலானவர்களுக்கு புளு ஆதார் கார்ட் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லாது. இன்று நாம் இந்த புளு ஆதார் கார்ட் பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம், அதாவது இந்த புளு ஆதார் கார்ட் என்றால் என்ன, யாருக்கு இந்த புளு ஆதார் கார்ட் பயன்படுகிறது. இந்த புளு ஆதார் கார்டின் சிறப்பு அம்சம் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். சரி வாங்க பதிவை தொடர்ந்து படித்து தகவலை முழுமையாக தெரிந்துகொள்வோம்.
பொதுவாக இந்தியாவில் அரசு மானியங்கள், அரசு நலத்திட்டங்கள் பெறுவதற்கு தேவைப்படும் ஆவணங்களில் ஆதார் அட்டையும் அவசியமான ஒரு ஆவணம் ஆகும். இது இந்தியாவில் பல இடங்களில் அடையாள அட்டையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆதார் அட்டையில் கண்ணின் கருவிழி, கை ரேகை என முக்கிய அடையாளங்கள் பதிவாகியுள்ளன. இந்த ஆதாரில் பயனாளியின் பெயர், பிறந்த தேதி, நிரந்தர முகவரி உள்ளிட்ட தகவல்கள் உள்ளன. இதற்கு தனித்துவமான 12 இலக்க எண்கள் ஆதார் அட்டை ஆணையத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய அரசு நீல நிற ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது. இது 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நீல ஆதார் அட்டையின் முக்கிய அம்சம் என்னவென்றால் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் பயோமெட்ரிக் தரவுகளை வழங்கத் தேவையில்லை.
அதற்கு மாறாக மக்கள்தொகை தரவு மற்றும் பெற்றோரின் ஆதார் எண்ணை குறிப்பிட்டு நீல நிற ஆதாரை பெற்றுக் கொள்ளலாம். இந்த நீல நிற அட்டைக்கு எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா? ஆதார் ஆணையத்தின் (UIDAI) uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் நீல நிற ஆதாருக்கு விண்ணப்பிக்கும் படிவத்தில் விவரங்களை நிரப்பி பதிவு செய்வதற்கான அப்பாயிண்ட்மென்ட்டை தேர்வு செய்ய வேண்டும். பிறகு அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும். ஆதார் மையத்தில் பெற்றோரின் ஆதார், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வரும். அத்தாட்சி சீட்டை பெற மறந்துவிடாதீர்கள். 60 நாட்கள் கழித்து நீல நிற ஆதார் கார்டு உங்கள் குழந்தையின் பெயருக்கு வரும். இதற்கு பால ஆதார் கார்டு என்றும் பெயர். அந்த குழந்தைக்கு 5 வயது முடிந்தது அதனுடைய 10 விரல்கள், கண் கருவிழி, புகைப்படத்தை ஆதாரில் அப்டேட் செய்ய வேண்டும்.
அது போல் 15 வயது வரும் போதும் இதை மீண்டும் செய்ய வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் 5 வயதுக்கு மேல் போனால் அந்த நீல நிற அடையாள அட்டை செல்லாது. பதின்ம வயதில் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்வது இலவசம். பிறந்த குழந்தைக்கு கூட நீல நிற ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு குழந்தையின் பிறந்த சான்று, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ரசீது ஆகியவை தேவை.
புளு ஆதார் கார்டின் பயன்கள்:
புளு ஆதார் வைத்திருக்கும் குலந்திகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து வரும் அனைத்து திட்டங்களுக்கும் மிக எளிதாக கிடைத்துவிடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்
👇Whatsapp-ல் நீங்கள் இந்த நம்பரை Save பண்ணி வச்சிட்டாபோதும்!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |