Common Wall Tear Down Rules in India
நம் முன்னோர்கள் காலத்தில் இரண்டு வீட்டிற்கும் ஒரு சுவர் மட்டும் இருந்தது, இந்த வீடுகள் எல்லாம் இப்போதும் இருக்கின்றது. இன்றைய காலத்தில் கட்டும் வீடுகள் அனைத்தும் தனித்தனியாக கட்டப்படுகிறது. அதுவே வாடகை வீடாக இருந்தால் ஒரு சுவற்றில் இரண்டு வீடுகள் இருக்கும். சொந்த வீட்டில் இரண்டு வீட்டிற்கு ஒரு பொது சுவர் இருந்தால் பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். நமக்கு மட்டும் தனிசுவராக உடைத்து விட்டு கட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த பொதுசுவற்றை இடிக்கலாமா என்ற சந்தேகமும் இருக்கும். அதனால் தான் இந்த பதிவில் இரண்டு வீட்டிற்கும் உள்ள பொது சுவற்றை இடிக்க முடியுமா என்று அறிந்து கொள்வோம் வாங்க..
இரண்டு வீட்டிற்கும் இடையே உள்ள பொது சுவற்றை ஒருவர் இடிக்க முடியுமா.?
நம் முன்னோர்கள் காலத்தில் கட்டப்பட்ட வீடுகள் பெரும்பாலானவை இரண்டு வீட்டிற்கு ஒரு சுவராக தான் கட்டப்பட்டிருந்தது. அடுத்த அடுத்த தலைமுறையினரும் அதே வீட்டில் வசிப்பார்களா என்றால் கேள்வி குறி தான், ஏனென்றால் அவர்களுக்கு அந்த மாடல் பிடிக்காமல் இருக்கும், அதனால் அதனை வேறு மாடலில் கட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். அதில் இந்த பொது சுவர் இடஞ்சலோக இருக்கும். அப்போது அதனை இடிக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதற்கு என்ன வழிமுறை என்று அறிந்து கொள்வோம் வாங்க..
வழிமுறைகள்:
☑ பொதுவாக இரண்டு வீட்டிற்கும் உள்ள பொது சுவற்றை இடிக்க வேண்டுமென்றால் இரண்டு வீட்டடு காரரிடமிருந்து சம்மதம் வேண்டும், இரண்டு வீட்டார்களின் சம்மதம் இல்லாமல் வீட்டை இடிக்க முடியாது.
☑ அடுத்து கட்டிட பொறியியலாளர் அழைத்து வந்து அவர் அறிவுரையின் பேரில் தான் சுவற்றை இடிக்க முடியும். ஏனென்றால் சுவற்றை இடிப்பதால் வீட்டிற்கு ஏதாவது பாதிப்பு வருமா என்று ஆராய வேண்டும்.
☑ அடுத்து ஒரு வழக்கறிஞரை வைத்து தான் இடிக்க வேண்டும், நீங்களாக பொது சுவற்றை இடிக்க கூடாது. ஏனென்றால் இதனால் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. வழக்கறிஞர் இல்லாமல் சுவர் இடிப்பு செய்யும் போது, மற்றொருவர் எதிர்க்க நேர்ந்தால், இருவர் இடையே பிரச்சனை ஏற்படும். இதனால் காவல் துறையிடம் புகார் கொடுப்பார்கள். இதன் மூலம் நீங்கள் கோர்ட் மற்றும் காவல் நிலையம் என்று அலைய வேண்டியிருக்கும். அதனால் மேல் கூறப்பட்டுள்ள முறையில் இரண்டு வீட்டிற்கு உள்ள பொது சுவற்றை இடிக்க வேண்டும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |