Custard Powder என்றால் என்ன தெரியுமா..?

Advertisement

Custard Powder in Tamil

அனைவருக்கும் வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவின் மூலம் Custard Powder in Tamil அதாவது கஸ்டர்டு பவுடர் என்றால் என்ன..? அது எதற்கு பயன்படுகிறது என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நாம் அனைவருமே நமக்கு தெரியாத ஏதாவது ஒரு தகவலை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்போம். அப்படி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் கஸ்டர்டு பவுடர் (Custard Powder in Tamil) என்பதும் ஓன்று. ஓகே வாங்க பிரண்ட்ஸ் Custard Powder in Tamil பற்றி தெரிந்து கொள்வோம்.

அவகேடோ என்பதன் தமிழ் பெயர் என்ன தெரியுமா

கஸ்டர்டு பவுடர் என்றால் என்ன..?

கஸ்டர்ட் பவுடர் (Custard Powder) என்பது சோள மாவு அல்லது சோள மாவுடன் சுவையூட்டும் பொருட்களுடன் சேர்க்கப்படும் ஒரு உணவு பொருள் ஆகும்.

அதாவது முட்டைக்கு மாற்றாக விரும்பும் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக கஸ்டர்ட் பவுடர் உருவானது. இது கார்ன்ஃப்ளார் போல அதாவது சோளமாவை போல தோற்றமளிக்கிறது.  இந்த கஸ்டர்ட் பவுடரானது உப்பு மற்றும் சுவையுடன் சேர்த்து சோள மாவு பயன்படுத்தப்படுவது போலவே இருக்கும்.

இந்த கஸ்டர்ட் பவுடர் ஒரு மூலப்பொருளாகும். இது அனைவருக்கும் ஒரு நொடியில் கஸ்டர்ட் செய்ய உதவுகிறது.

கடைகளில் எத்தனையோ வகை பிராண்டுகளில் கஸ்டர்ட் பவுடர் கிடைக்கின்றன. ஆகவே நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப மற்றும் பிடித்த பிராண்டுகளில் இந்த கஸ்டர்ட் பவுடரை வாங்கி கொள்ளலாம். அதுபோல நீங்கள் வாங்கும் பேக்கேஜிங் விவரங்களை சரி பார்க்கவும்.

மேலும் இந்த கஸ்டர்ட் பவுடரில் உள்ள சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.

வெண்ணெய் பழம் பற்றிய தகவல்

கஸ்டர்டு பவுடர் செய்ய தேவையான பொருட்கள்:

  1. சர்க்கரை பவுடர் – 1 கப்
  2. பால் பவுடர் – 1/2 கப்
  3. சோளமாவு – 1/2 கப்
  4. வெண்ணிலா எஸனஸ் – 2 சொட்டு
  5. மஞ்சள் கலர் – 2 சிட்டிகை

மேல்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். அவ்வளவு தான் கஸ்டர்டு பவுடர் ரெடி இந்த பவுடரை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து பயன்படுத்துங்கள்.

இந்த கஸ்டர்டு பவுடரை புட்டுகள், கேக்குகள் மற்றும் பிற இனிப்புகளுக்கு மேல் கஸ்டர்ட் பவுடர் சாஸ்களைப் பயன்படுத்தலாம். ஜெல்லி மீது ஊற்றப்படும் சாஸாக பயன்படுத்தலாம்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement