கும்பமேளாவுக்கும் மகா கும்பமேளாவுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா.?

Advertisement

கும்பமேளாவுக்கும் மகா கும்பமேளாவுக்கும் இடையே உள்ளே  வித்தியாசம்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கும்பமேளாவுக்கும் மகா கும்பமேளாவுக்கும் இடையே உள்ளே  வேறுபாடு பற்றி கொடுத்துள்ளோம். நம்மில் பலருக்கும் இந்த குழப்பம் இருக்கும். ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில் இந்த பதிவு அமையும். கும்பமேளாவின்போது புனித நீர்களில் நீராடுவது ஆன்மாவை தூய்மைப்படுத்தும், பாவங்களும் குறையும்.

பொதுவாக கும்பமேளா நான்கு வகைகளாக கொண்டாடப்படுகிறது. ஆர்த் கும்மேளா, பூர்ண கும்பமேளா, மக் கும்பமேளா மற்றும் மகா கும்பமேளா என நான்கு கும்பமேளா உள்ளது. இதில் மகா கும்பமேளா தான் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் மிகப்பெரிய விழாவாகவும் நடைபெறுகிறது. அந்த வகையில், இதில் கும்ப மேளா என்பதற்கும் மகா கும்பமேளா என்று சொல்வதற்கும் என்ன வேறுபாடு என்பது பலரின் கேள்வி. ஆகையால், அதனை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க.

Difference Between Kumbh Mela and Maha Kumbh Mela in Tamil:

  • இந்தியாவில் கும்பமேளாவில் நான்கு வகைகள் உள்ளது.
  • மகா கும்ப மேளா என்பது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இது  அலகாபாத்தில் நடைபெறும்.
  • பூர்ண கும்பமேளா என்பது, 12 வருடங்களுக்கு ஒருமுறை கொண்டாடப்படும். இது அலகாபாத், ஹரித்வார், நாசிக் மற்றும் உஜ்ஜைன் ஆகிய இடங்களில் நடைபெறும்.
  • ஆர்த கும்ப மேளா என்பது, 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இது ஹரித்வார் மற்றும் அலகாபாத் ஆகிய இடங்களில் நடைபெறும்.
  • மேக் மேளா – இது ஆண்டுதோறும் அலகாபாத்தில் கொண்டாடப்படும்.

தமிழகத்தில் கும்பமேளாவை மஹாமகம் என்று கூறுவோம். தமிழநாட்டில் கும்பகோணத்தில் 12 வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படுவது தான் மகாமகம்.

மகா கும்பமேளா நடைபெறும் தேதி,நேரம் மற்றும் நடைபெறும் இடம் 2025.!

Kumbh Mela Meaning in Tamil:

Kumbh Mela Meaning in Tamil

கும்ப மேளா என்பது, சம்ஸ்கிருத சொல்லான கும்ப மற்றும் மேளா என்பதிலிருந்து வந்தது ஆகும். கும்பம் என்றால், கலசம் என்று பொருள். இது புனித நீரை குறிக்கிறது. மேளா என்பது, சந்தை அல்லது பெரிய கூட்டம் என்று பொருள்படும்.

 கும்பமேளா ஒவ்வொரு 12 ஆண்டுக்கும் ஒருமுறை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு அலகாபாத்/பிரயாக், ஹரித்வார், உஜ்ஜைன், நாசிக் ஆகிய இடங்களில் நடத்தப்படும் நிகழ்வு ஆகும். இது, புனித நீராடலுக்கான நடத்தப்படும் ஆன்மீக திருவிழா ஆகும்.

What is Maha Kumbh Mela 2025 in Tamil:

 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத்தில் நடைபெறும் விழா மகா கும்பமேளா ஆகும். இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதிக மக்கள் கூடும் விழா என்றால் அது இந்த மகா கும்பமேளா தான். 144 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும். இதில் கலந்துகொண்டால் முன்வினை பாவங்கள் நீங்கும். மோட்சம் கிட்டும். இதில் கோடிக்கணக்கில் மக்கள் கலந்து கொள்வார்கள்.

திருவோண சங்கமம் என்பது, கங்கை ஆறும், யமுனை ஆறும் கண்ணனுக்கு புலப்படாத சரஸ்வதி ஆறும் கூடும் இடமாகும். இந்த மூன்று ஆறுகளும் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) கூடுகிறது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா முழு (பூர்ண) கும்பமேளா எனப்படும். இப்படி 12 ஆண்டுகளுக்கு நடைபெறும் கும்பமேளா ஆனது, தொடர்ந்து 12 -வது முறை கொண்டாடப்படும் நிகழ்வு மகா கும்பமேளா ஆகும். அதாவது 144 ( 12 X 12 ) ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா மகா கும்பமேளா எனப்படும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement