தான செட்டில்மென்ட் செய்ய தேவையான ஆவணங்கள்

Advertisement

தான செட்டில்மென்ட் விளக்கம் – Documents required for dhana settlement

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றிய பதிவில் நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் தான செட்டில்மென்ட் செய்ய தேவையான ஆவணங்கள் என்ன என்பது குறித்த தகவலை தான் நாம் தெரிந்துகொள்ள போகிறோம் ஆக பதிவை முழுமையாக படித்து என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த தான பத்திரத்தில் இரண்டு வகைகள் இருக்கிறது. அவை தான பத்திரம் மற்றொன்று தான செட்டிமெண்ட் ஆகும். இவற்றில் நாம் செட்டில் பத்திரத்தை பற்றி தெரிந்துகொள்வோம். இது சொந்தத்திற்கு உள்ளாகவே நடக்கக்கூடிய பரிமாற்றம் ஆகும்.

அப்பா, அம்மா, இவர்களின் பிள்ளைகள் மற்றும் அம்மா அப்பா அவர்களின் பெற்றோர்கள் இவர்களுக்கும் மட்டுமே இந்த பத்திர பதிவு செய்ய முடியும். பெற்றோர்களுக்கும் கூட எழுதி வைக்கலாம். சொந்தத்திற்கு உள்ளே நடக்கும் பதிவு என்பதில் அரசாங்கம் பதிவு மற்றும் முத்திரை கட்டணத்தினை இரு மடங்கு குறைத்திருக்கிறது. அதாவது முத்திரை ஓன்று பதிவுக்கு ஒன்று என உள்ளது. எவ்வளவு பெரிய சொத்தாக இருந்தாலும் அதிகபட்சமாகவே 29,000/- தான் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தான செட்டில்மென்ட் செய்ய தேவையான ஆவணங்கள்:

  • ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஒட்டுநர் உரிமம் 
  • பட்டா 
  • அசல் பத்திரம் 
  • வில்லங்க சான்று (கடைசி 10 நாள்)
  • வீட்டு, சொத்து வரி ரசீது 
  • சாட்சி ப்ரூப் 

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் தேவைப்படும்.

தான செட்டில்மென்ட் ரத்து செய்ய முடியுமா?

தான செட்டில்மென்ட் ரத்து செய்ய முடியுமா என்று பெருமபலனவர்களுக்கு சந்தேகம் இருக்கிறது.. உங்கள் தாய் அல்லது தந்தை அல்லது வேறு ஒருவர் உங்களுக்கு கொடுத்த தான செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்ய முடியாது.

தானமாக எப்போது கொடுக்கப்பட்டதோ அப்போதே அதனை திரும்பவும் மற்றும் ரத்து செய்ய முடியாது. மேலும் தானம் குடுக்கும் நபர் (அந்த இடம் அல்லது நிலம் அவனுக்கு சொந்தமானது என்று பொருள்) சேர்ந்து உங்களிடம் ஒப்படைக்க வேண்டும். மற்றும் பட்டா உங்கள் பெயருக்கு மாற்றம் செய்து இருந்தல் அவசியமாகும்.

அவ்வாறு சுவாதீனம் மற்றும் பட்டா மாற்றம் செய்யாமல் இருப்பது தான செட்டில்மெண்ட் பத்திரத்துக்கு மிகவும் ஆபத்து ஆகும். தானம் செய்பவர் சில பல நிபந்தனைகள் மற்றும் வித்துமுறைகளுடன் உங்களுக்கு கொடுத்தார் என்றால் அத்தகைய நிபந்தனை மற்றும் விதிமுறைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் அதுவும் ஒரு பிரச்சனையே. தானம் என்பது தனது சொந்த ரத்தத்தில் கொடுப்பது ஆகும். மூன்றாவது நபருக்கும் அவர்கள் கொடுக்கும் உரிமை உள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பத்திர பதிவு செய்ய விடாமல் தடை மனு கொடுப்பது எப்படி?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement