வெண்ணெயின் Expiry Date என்னான்னு தெரியுமா.?

Advertisement

Expiry Date for Butter in Tamil 

வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் நாம் வெண்ணெயின் Expiry Date பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க. Expiry Date என்பது மிகவும் அவசியமான ஒன்று. நாம் வாங்கும் அனைத்து பொருட்களிலும் Expiry Date என்பது இருக்கும். எனவே, அதனை தெரிந்துகொண்டு பொருட்களை வாங்குவது அவசியம். அந்த வகையில் இப்பதிவில் வெண்ணெயின் Expiry Date  பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க.

கடையில் உள்ள வெண்ணெயினை வாங்கும்போது அதில் Expiry Date என்பது போடப்பட்டிருக்கும். ஆனால், வீட்டில் தயாரித்த வெண்ணெயில் Expiry Date என்பது இருக்காது. அதனால், அதனுடைய காலாவதி தேதி என்பது நமக்கு தெரியாது. அதேபோல், கடைகளில் வாங்கும் பட்டரிலும் Expiry Date குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதனை எத்தனை நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்பதும் நமக்கு தெரியாது. எனவே, இப்பதிவின் வாயிலாக கடைகளில் வாங்கும் பட்டர் மற்றும் வீட்டில் தயாரித்த பட்டர் இரண்டின் Expiry Date பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தயிரின் காலாவதி தேதி

வெண்ணெய் எவ்வளவு நாள் கெடாமல் இருக்கும்:

 butter expiry date

கடைகளில் வாங்கிய வெண்ணெயை திறக்கப்படாமல் பிரிட்ஜில் வைத்திருந்தால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள Expiry Date முடிந்தும் மேலும் ஒரு மாதம் வரை நீடிக்கும். அதாவது, திறக்காமல் பிரிட்ஜில் வைத்திருந்தால் Expiry Date முடிந்தாலும் மேலும், ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். அதுவே,வெண்ணெய் திறக்கப்பட்டிருந்தால் Expiry Date முடிந்து மேலும், இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும்.

வீட்டில் தயாரித்த வெண்ணெயாக இருந்தால், இறுக்கமாக மூடப்பட்டு ப்ரிட்ஜில் வைக்கப்பட்டு இருந்தால் வெண்ணெய் ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். அதேசமயம், ப்ரிட்ஜில் ஃப்ரீசரில் சேமிக்கப்படும் வெண்ணெய் ஒரு வருடம் வரை வீணாகாமல் இருக்கும். எனவே, நாம் சேமிக்கும் நிலையை பொறுத்து வெண்ணெயின் காலாவதி என்பது இருக்கும்.

முட்டையின் Expiry தேதி பற்றி தெரியுமா உங்களுக்கு?

வெண்ணெய் கெட்டுவிட்டதா என்பதை தெரிந்துகொள்வது எப்படி.?

வெண்ணெய் கெட்டுபோய் விட்டது என்பதை தெரிந்துகொள்வது மிகவும் எளிது. அதாவது, வெண்ணெயில் இருந்து ஒரு புளிப்பு வாசனையை நீங்கள் உணர்ந்தால் வெண்ணெய் கெட்டுவிட தொடங்கிவிட்டது என்பதை அறிய வேண்டும். மேலும், வெண்ணெயில் நிற மாற்றமும் உண்டாகும். இதனை வைத்தே வெண்ணெய் கெட்டுவிட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement