அனுமன் சகோதரர் எத்தனை பேர் | Hanuman 5 Brothers Name in Tamil
ராம பக்தரான ஆஞ்சேநேயரை யாரும் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதனாலயே நிறைய நபர்களுக்கு இந்த கடவுளை பிடிக்கும். இவருக்கு உகந்த கிழமையாக சனிக்கிழமை இருக்கிறது. இந்த நாளில் இவருக்கு விரதம் இருந்து வழிபடுவார்கள். வெற்றிலை மாலை இவருக்கு உகந்ததாக இருக்கிறது. அதனால் விரதம் மேற்கொள்பவர்கள் வெற்றிலை மாலையை சாத்துவார்கள். இப்படி விரதம் இருப்பதால் நாம் வேண்டி கொள்வது நடக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. இவரை பற்றிய யாரும் அறியாத தகவலை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க.
ஆஞ்சேநேயர் பற்றிய அறியாத தகவல்:
அனுமான் என்ற சொல்லுக்கு அர்த்தத்தை அறிந்து கொள்வோம். அதில் முதல் இரண்டு வார்த்தையான அனு என்றால் தாடை, மான் என்றால் சிதைக்கப்பட்டவர் என்று பொருள்படுகிறது. இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் தாக்கியதால் அனுமானின் தாடை சிதைவுற்றது. இதனால் அவருக்கு அனுமான் என்ற பெயர்வைக்க காரணமாக இருந்தது.
ராமபிரானின் கண்மூடித்தனமான பக்தர் என்று கூறலாம். பிரம்மாண்ட புராணத்தின் படி ஆஞ்சநேயருக்கு ஐந்து சகோதரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் ஐந்து பேரும் ஆஞ்சநேயருக்கு பிறகு பிறந்தவர்களாக இருக்கிறார்கள். ஸ்ருதிமான், மதிமான், கேதுமான், கட்டுமான் மற்றும் த்ரிதிமான் ஆகியன அவர்களின் பெயர்கள். இவர்கள் ஐந்து பேருக்கும் குடும்பம், குழந்தைகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இவர்களை பற்றி சில வரிகளில் அறிந்து கொள்வோம்.
மதிமான்:
மதிமான் என்பவர் அறிவுக்களஞ்சியமாக திகழ்ந்தார். அறிவு என்ற வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக இருந்தார். மேலும் இவரிடம் யாரும் பேசி வெல்ல முடியாது. அந்த அளவிற்கு பேச்சு திறமை உடையவர்.
ஸ்ருதிமான்:
ஸ்ருதிமான் இவரும் அறிவுப்புலமை பெற்றவராக இருக்கிறார். வேத புராணங்களில் புலமை வாய்ந்தவராக இருக்கிறார். ஜோதிடம் மற்றும் இலக்கியத்தில் கை தேர்ந்தவராக இருக்கிறார்.
கேதுமான்:
இவர் பகைவர்களை எதிர்த்து போரட கூடிய வல்லமை படைத்தவர். மேலும் இவர் போர் வீரராக திகழ்கிறார். போரில் ஆயுந்தகளை கையாள்வதில் வல்லமை படைத்தவராக இருக்கிறார். போர் கலைகள் அனைத்தும் இவருக்கு கை வந்த கலையாக இருக்கிறது.
த்ரிதிமான்:
இவர் குறும்புத்தனமும், சின்னபிள்ளைத்தனமும் அதிகமாக காணப்படும். இவர் அனுமான் மீதுமிகுந்த பாசமும், அக்கறையும் கொண்டவராக இருப்பார்.
கதிமான்:
இவர் மரம் ஏறுதல், நீளத்தை தாண்டுதல் போன்ற திறமை காணப்படும். எவ்வளவு உயரமான மரத்திலும் சீக்கிரமாக ஏறக்கூடிய திறமை பெற்றவராக இருப்பார்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |