Things to know before staying at a hotel
சுற்றுலா செல்லும் போதும் சரி அல்லது வேலை சம்மந்தமாக வெளியே சென்றாலும் நேரம் ஆகிவிட்டால் அல்லது மறுநாள் வேலை இருக்கும் பட்சத்தில் அங்கையே ஹோட்டலில் தங்கி விடுவோம். அப்படி தங்கும் போது நமக்கு எங்கு ரூம் இருக்கிறது, எப்படி பார்க்க வேண்டும் என்று தெரியாது. பக்கத்தில் ஏதாவது ரூம் இருந்தால் அங்கையே தங்கி விடுவோம். அப்படி தங்கும் பட்சத்தில் நாம் ஹோட்டலில் என்னென்ன விஷயத்தெல்லாம் பார்க்க வேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்ளுங்கள்.
அறை தங்கும் நேரம்:
ஹோட்டல்களில் இரண்டு விதமான செக் இன் டைம், செக் அவுட் டைம் முறை கடைபிடிக்கப்படுகிறது. அதில் முதல் முறையாக இருப்பது 24 மணி நேரம் முறை தான் கடைபிடிக்கப்படும். அதாவது மதியம் 3 மணிக்கு ரூமில் தங்க போகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். இவை மறுநாள் மதியம்03 மணி வரைக்கும் ஒரு நாள் வாடகை என்று கணக்கிடப்படும். இதனை தான் 24 மணி நேர முறை என்று கூறப்படுகிறது. இன்னொரு முறை என்றால் 12 மனை நேரம் ஒரு நாள் முறை என்று கணக்கிடுவார்கள். எடுத்துக்காட்டாக சொல்லப்போனால் காலை 7 மணிக்குரூம் எடுக்கிறீர்கள் என்றால் அன்றைய தினம் 7 மணி முதல் அன்றைய தினம் பகல் பனிரெண்டு மணி வரை ஒருநாள் வாடகை கணக்கிடப்படும். அதன் பிறகு 12 மணி முதல் மறுநாள் 12 மணி வரை ஒரு நாள் கணக்காக எடுத்து கொள்வார்கள். இதில் 24 மணி நேரம் வாடகைக்கு எடுப்பது தான் சிறந்ததாக இருக்கும்.
காலை உணவு:
பல ஹோட்டல்களில் காம்ப்ளிமெண்டரி பிரேக் பாஸ்ட் கொடுக்கப்படுகிறது. அப்படி கொடுத்தால் நல்லது தானே. அதனால் ரூம் எடுப்பதற்கு முன்னர் இதனை கேட்டு கொள்ளுங்கள்.
அடுத்து நீங்கள் ரூமை புக் செய்வதற்கு முன்னால் நேரிடையாக சென்று ரூமை பார்ப்பது நல்லது. ஏனென்றால் சில ஹோட்டல்கள் வெளியே நல்லா இருக்கும் உள்ளே பார்த்தால் சுத்தமாக இருக்காது. அதில் தலையணை, டாய்லெட் போன்றவை சுத்தம் இல்லாமல் இருக்கலாம். அதனால் ஒருமுறை பார்த்து விட்டு பதிவு செய்யுங்கள்.
ஹோட்டல் ரூம்களில் ஒளிந்திருக்கும் சீக்ரெட் கேமரா.. உங்கள் ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடிப்பது எப்படி?
புரோக்கரை தவிர்த்து விடவும்:
நீங்கள் வெளியூருக்கு செல்ல போகிறீர்கள் என்றால் அங்கே ரூம் எங்கே உள்ளது என்றெல்லாம் தெரியாது. அப்படி இருக்கும் போது புரோக்கர்கள் எனக்கு தெரிஞ்ஞ்ச ஹோட்டல் இருக்கும், நல்லா இருக்கும், விலை குறைவாக இருக்கும் என்று கூறினால் அவர்களை தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் அவர்கள் ரூம் நல்லதாகவே கூறினாலும் அவர்களுக்கு நீங்கள் கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கும். அதற்கு பதிலாக நீங்கள் அங்கே உள்ள காபி அல்லது உணவு ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு அங்கே உள்ளவர்களை விசாரித்தாலே சொல்வார்கள்.
Reviews செக் செய்ய வேண்டும்:
நீங்கள் ஒரு ஹோட்டலில் தங்க போகிறீர்கள் என்றால் கூகுளில் ஹோட்டல் நேமை போட்டால் வரும். அப்போது நீங்கள் REVIEWS-யை செக் செய்ய வேண்டும். பலரும் இந்த ஹோட்டலை பற்றி நல்ல விதமாக போட்டிருந்தால் அதில் நீங்கள் தாரளமாக தங்கலாம்.
மேலும் ரூமில் கரண்ட் வசதி, தண்ணீர் வசதி போன்றவை எப்படி உள்ளது என்று பார்த்து கொள்ளவும்.
மேல் கூறியுள்ள விஷயங்களை பின்பற்றி ரூமை பதவு செய்யுங்கள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |