How Many Times Kamarajar Was CM in Tamil | Kamarajar CM Year
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் காமராஜர் எத்தனை ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார் (Kamarajar CM Year) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். கல்வி கண் திறந்த காமராஜர் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். இவர் ஒரு உன்னத அரசியல்வாதி மற்றும் சிறந்த இந்திய விடுதலை போராட்ட ஆர்வலர் ஆவார். காமராசர் அவர்கள், 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி பிறந்தார். குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மையாருக்கு மகனாக பிறந்தார்.
இவருக்கு குலதெய்வத்தின் பெயரான காமாட்சி என்ற பெயரினை வைத்தார்கள். ஆனால், இவர் பெற்றோர்கள் இவரை ராசா என்று செல்லமாக அழைத்து வந்தார்கள். எனவே,காமாட்சி மற்றும் ராசா என்ற இரு பெயரினையும் சேர்த்து காமராசர் என்பதாயிற்று. இவர் தனது 12 வயதில் பள்ளிப்படிப்பை மடித்து விட்டு தன் தாய்மாமாவின் துணிக்கடையில் வேளைக்கு சேர்ந்தார். அதன் பிறகு, இவர் வாழ்க்கையில் அரசியல், விடுதலை போராட்டம் என அனைத்தும் இருந்தது. ஏழை குழந்தைகளுக்கு கல்வியை அளித்தார. மதிய உணவு திட்டத்தையும், இலவச கல்வி, சீருடை திட்டத்தையும் ஏற்படுத்தி கொடுத்தார். இவரை பற்றி ஒரு பதிவில் கூறிவிட முடியாது. இவரின் சிறப்புகளை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் இப்பதிவில் How Many Times Kamarajar Was CM in Tamil என்பதை பின்வருமாறு தெரிந்துகொள்ளலாம் வாங்க.
காமராஜர் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
How Many Years Kamaraj was CM:
காமராசர் அவர்கள் 9 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார். அதாவது, இவர் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் 1963 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். காமராஜர் தமிழக முதல்வராக மூன்று முறை பதவி வகித்தார்.அதன் பிறகு, 1964 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார். இவர், இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்தபோது, லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி போன்ற தலைவர்கள் இந்திய பிரதமர் பதவிக்கு உயர்த்தப்படுவதற்கு காரணமாக இருந்தார். அதனால், இவரை இந்திய அரசியலில் கிங்மேக்கர் என்று அழைக்கப்பட்டார். அதாவது, அரசர்களை உருவாக்குபவர் என்று அழைக்கப்பட்டார். அதன் பிறகு, இவர் நிறுவன காங்கிரசு கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராகவும் இருந்துள்ளார்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |