How to Complaint Against Corrupt Government Officials in Tamil
நாம் அனைவருமே ஏதாவது சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் அரசு அதிகாரிகளை சந்தித்து தான் வாங்க வேண்டியிருக்கும். இவர்கள் செய்யும் கடமைக்கு லஞ்சம் வாங்குவது பெரும்பாலான இடத்தில் நடக்கிறது. குழந்தை பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வாங்குகிற வரைக்கும் லஞ்சம் கேட்கிறார்கள். நாம் டீவியில் பார்த்திருப்போம் வருமான சான்றிதழ் கையெழுத்து வாங்குபவரிடம் பணம் கேட்டதால் அரசு அதிகாரி கைது செய்யப்பட்டார். இதற்கு புகார் அளிப்பது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
லஞ்சம் வாங்கினால் புகார் அளிப்பது எப்படி.?
லஞ்சம் எங்கு எங்கு எல்லாம் தலைவிரித்து ஆடுகின்றதோ அங்கு எல்லாம் சட்டம் வளைந்து நெளிந்து போகின்றது. இதனால் தான் பல குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. இது அரசின் தவறு அல்ல. ஒரு சிலரின் தவறே. ஏனென்றால் ஒரு தவறு நடக்கிறது என்றால் புகார் கொடுத்து விட்டால் மறுபடியும் உங்களை போன்றோர் பாதிக்கப்படமாட்டார்கள்.
இந்த லஞ்சமானது அரசு அதிகாரியிடமிருந்து ஆரம்பிப்பதில்லை. எப்படியென்றால் நீங்கள் வருமான சான்றிதழ் வாங்க போகிறீர்கள் என்றால் அங்கு அதிகாரி கையெழுத்து இட வேண்டியிருக்கும். அவர் கையெழுத்து இடும் போது உங்களுடைய வருமானம் சரியாக இருக்கின்றதா என்று தெரிந்து கொண்ட பிறகுதான் கையெழுத்து இட வேண்டியிருக்கும். இதற்கு நாட்கள் ஆகும் என்று கூறினால் அவரிடம் பணத்தை கொடுத்து சீக்கிரம்போட வைப்பது பொதுமக்களின் குற்றமாக இருக்கிறது.
ஆன்லைன் மூலம் மின்தடையை முன்னரே கண்டுபிடிப்பது எப்படி
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு தனிப்படை உள்ளது, அங்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க முடியும். புகாரை தபால், தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது நேரில் அனுப்பலாம்.
நீங்கள் ஒரு அரசு அதிகாரியிடம் எந்த விஷயத்திற்காக செல்லும் போது லஞ்சம் கேட்கிறார் என்றால் அதை நீங்கள் புகார் அளிக்கலாம். அதற்கு உங்களுடைய மாவட்டத்தின் லஞ்ச ஒழிப்பு அதிகாரிக்கு கடிதம் எழுத வேண்டும்.
இந்த கடிதத்தில் நீங்கள் என்ன விஷத்திற்காக சென்றீர்கள், அதற்கு அவர் எவ்வளவு லஞ்சம் கேட்டார் போன்ற விவரத்தை எழுதி அனுப்ப வேண்டும். இந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரி அதனை பார்த்து விட்டு அதற்கான நடவடிக்கையை எடுப்பார்.
அதிகாரியை தொடர்பு கொள்வது எப்படி.?
அரசு அதிகாரி ஒருவர் தன் கடமையைச் செய்ய லஞ்சம் கேட்கிறார் என்றால் அவரைப் பற்றி எங்கு எப்படிப் புகார் அளிக்க வேண்டும் என்று தெரியவில்லையா. உடனே dvac.tn.gov.in என்ற தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |