வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பாலில் கலப்படம் உள்ளது என்பதை கண்டறிவது எப்படி.?

Updated On: May 24, 2024 4:27 PM
Follow Us:
How to Detect Adulterated Milk in Tamil
---Advertisement---
Advertisement

How to Detect Adulterated Milk in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கலப்படம் உள்ள பாலினை எப்படி கண்டுபிடிப்பது எப்படி என்பதை விவரித்துள்ளோம்.  நாம் அன்றாடம் பயன்படுத்தும் முக்கியமான உணவு பொருள் பால். நாளின் துவக்கத்தையே நாம் டீ மூலம் தான் ஆரம்பிக்கிறோம். மற்ற உணவு பொருட்களின் தேவையை விட பாலின் தேவை என்பது அதிகமாக இருக்காது. இப்படி பாலின் தேவை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

இவ்வாறாக நாம் அதிகமாக பயன்படுத்தும் பாலில் கலப்படம் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் பாலில் கலப்படம் இருக்கிறதா.? இல்லையா.? என்பதை சோதிக்கும் டெஸ்ட்களை பற்றி பார்க்கலாம். பல்வேறு விதமான முறைகளில் பாலில் கலப்படம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை பின்வருமாறு கொடுத்துள்ளோம். இவற்றில் உங்களுக்கு எது எளிமையாக உள்ளதோ அம்முறையில் பாலை டெஸ்ட் செய்து பாருங்கள்.

காபி தூளில் கலப்படம் இருப்பதை கண்டறிய சில டிப்ஸ்..!

How to Identify Adulterated Milk in Tamil:

How to Identify Adulterated Milk in Tamil

டெஸ்ட் -1

ஒரு பாட்டிலில் 5 மில்லி பாலை எடுத்து கொள்ளுங்கள். அதில், அதே அளவு தண்ணீரை எடுத்து கொள்ளுங்கள். இப்போது இதனை நன்றாக கலக்கவும். இவ்வாறு குலுக்கும்போது பாலில் கலப்படம் இல்லை என்றால் நுரை எதுவும் வராது. அதுவே, பாலில் கலப்படம் இருந்தால் நுரை பொங்கும். இவ்வாறாக நுரை பொங்கி வந்தால் அது செயற்கை பால் ஆகும்.

டெஸ்ட் -2

3 மில்லி பாலை கொதிக்க வைத்து குளிர வைக்கவும். அடுத்த, இதில் 2-3 துளிகள் அயோடின் கரைசலை ஊற்றவும். பாலில் கலப்படம் எதுவும் இல்லையென்றால் நிறம் மாறாது அல்லது லேசான மஞ்சள் நிறத்தில் மாறும். அதுவே, நீல நிறமாக மாறினால் பாலில் கலப்படம் உள்ளது என்பது அர்த்தம். அதாவது, பாலில் மாவு கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பதாகும்.

டெஸ்ட் -3

ஒரு துளி பாலை எடுத்து, பாலிஷான சாய்வாக இருக்கும் தரையில் விடவும். பால் எந்தவொரு கலப்படமும் இல்லாமல் தூய்மையாக பாலாக இருந்தால், பால் துளி அதே இடத்தில் இருக்கும் அல்லது மெதுவாக வடிய தொடங்கும். அதுவே, கலப்படம் உள்ள பாலாக இருந்தால், வேகமாக கீழே வடிய தொடங்கும். இவ்வாறாக இருந்தால் பாலில் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பது அர்த்தம் ஆகும்.

பால் எத்தனை நாள் வரை கெடாமல் இருக்கும் தெரியுமா?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும். 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now